தென்கிழக்குப் பல்கலையில் புவியியல் துறை அறிமுகம்

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தில் ஒரு புதிய துறையாக புவியியல் துறை அண்மையில் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இப்புதிய துறை உருவாக்கமானது, கலை கலாசார பீடாதிபதியாக கடமையாற்றிவரும் எஸ்.எம்.ஆலிப்பின் முயற்சியின் காரணமாக இது உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்புதிய துறையின் உருவாக்கம் தென்கிழக்கப் பல்கலைக்கழகத்திற்கும், விசேடமாக கலை கலாசாரப் பீடத்தின் வளர்ச்சிக்கும் பிரதான ஒரு மைல் கல்லாகும் என பீடாதிபதி குறிப்பிட்டார். இதுவரை காலமும் பலர் பீடாதிபதியாகவும் துறைத் தலைவராகவும் இருந்த போதும் இவ்வாறான ஒரு முயற்சியை அவர்கள் மேற்கொள்ளவில்லை.

விரைவில் மேலும் இரண்டும் புதிய துறைகள் (பொருளியல் மற்றும் புள்ளியவிபரவியல் துறை, அரசியல் விஞ்ஞானத் துறை) உருவாகுவதற்கு முயற்சி எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் இதுவரை காலமும் இரண்டு துறைகளுடன் இயங்கிவந்த கலை கலாசார பீடமானது எதிர்வரும் காலங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட துறைகளுடன் இயங்கிவருவதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இதன் மூலம் புதிய கற்கை நெறிகளை அறிமுகப்படுத்தி பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் பட்டதாரிகள் உடனடியாக வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளக் கூடிய வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.