மட்டக்களப்பில் அதிகளவான மதுபானசாலை என அரியநேந்திரன் கூறியது உண்மைக்கு புறம்பானது -

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் யுத்தம் ஓய்ந்த பின்னர் எதுவித மதுபானசாலைகளும் திறக்கப்படவில்லை என மட்டு, அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் யுதத்தின் பின்னர் 85 மதுபான சாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கருத்தில் எதுவித உண்மையுமில்லையென மேலும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் மாநாடு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சர் நடராசா சுசாதரன் தலைமையில் இடம்பெற்றபோது இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பாராளுமன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில் உண்மை நிலையினை தெளிவுபடுத்தவேண்டியபொறுப்பு மதுவரித்திணைக்களம் என்ற ரீதியில் எமக்கு உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் கருத்தானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவே எம்மால் நோக்கப்படுகின்றது.2009ஆம் ஆண்டு கிழக்கு மீட்க்கப்பட்ட பின்னர் எதுவித மதுபானசாலை அனுமதிகளும் வழங்கப்படவில்லை.

யுத்தத்தின் முன்னரான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 55 மதுபான சாலைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.யுதத்தின் பின்னரான காலப்பகுதியில் உல்லாசப் பயணத்தை நோக்கமாகக்கொண்டு விடுதியுடன் இணைந்த இரண்டு மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மொத்தாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 57 மதுபானசாலைகளே செயற்பட்டுவருகின்றன.இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் யுத்த சூழ்நிலைக்கு பின்னர் 85 மதுபானசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கருத்து முற்றுமுழுதான உண்மைக்கு புறம்பானதாகவுள்ளது.
--