மேஷம்: அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய.
துணிவும், தன்னம்பிக்கையும் செயல்திறமையும், மாற்றங்களை அடிக்கடி விரும்பக்கூடிய மனநிலையும் கொண்ட மேஷ ராசி நேயர்களே!
புத்தாண்டு ஆரம்பத்தில் உங்கள் ஜன்ம ராசியில் குருவும், 5-ல் செவ்வாயும், 9-ல் சூரியனும் இருப்பது விசேடமாகும். 1,
5, 9-ஆம் வீடுகளுக்குரிய கிரகங்கள் திரிகோணாதிபதிகள் எனப்படுவார்கள். திரிகோண ஸ்தானங்கள் லட்சுமி ஸ்தானங்களாகும். இந்த வீடுகளுக்குரியவர்கள் ஒருவருக்கொருவர் திரிகோணமாக இருப்பதால் லட்சுமி கடாட்சம் நிச்சயம் உங்களுக்கு உண்டாகும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் இடம் பெறும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். முக்கியப் பதவிகளும், பொறுப்புக்களும் வந்து சேரும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.
முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் பெறுவீர்கள். தொலைதூரப் பயணம் மேற்கொள்ளவும் அதனால் பயன் பெறவும் வாய்ப்பு உண்டாகும். 2-ல் கேது, 7-ல் சனி, 8-ல் ராகு இருப்பது விசேடமாகாது. குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படும். அந்நியர்களின் குறுக்கீட்டால் சங்கடம் உண்டாகும். வெளியாட்களால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும்; எச்சரிக்கை தேவை. பயணம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை. ஏற்றுமதி-இறக்குமதி இனங்களால் அதிகம் பயனிராது. பயணத்தால் சங்கடம் மற்றும் விபத்து ஏற்படும். குறிப்பாக நீர் நிறைந்துள்ள இடங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை.
கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்களைக் காட்டிலும் உங்கள் வாழ்க்கைத்துணைவரின் கரம் மேலோங்கும். விட்டுக் கொடுத்துப் பழகி வருவது நல்லது. 17-5-2012 முதல் குரு உங்கள் ராசிக்கு 2-ஆமிடம் மாறுவதால் செல்வ வளம் பெருகும். குடும்பத்தில் சலசலப்புக்கள் குறையும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை உண்டாகும். கடன் தொல்லை நிச்சயம் குறையும். பிரச்னைகள் தீரும். 10-ஆம் வீட்டோன் சனி வலுத்திருப்பதால் செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். 11-ஆம் வீட்டோன் வலுத்திருப்பதால் வாழ்க்கைத்துணைவியாலும், கூட்டாளிகளாலும் ஆதாயம் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மக்களாலும், தந்தையாலும் நலம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். புதிய சொத்துக்கள் சேரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.
தொழில் ரீதியாக வெளிநாடு சென்று வர வாய்ப்பு உண்டாகும். பொது நலப்பணியாளர்கள் புகழ் பெறுவார்கள். வருடப் பின்பகுதியில் செல்வாக்கும் மதிப்பும் உயரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும்.
குரு, சனி ஆகியோருக்குப் பிரீதி செய்து கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.
திசை: கிழக்கு, வடகிழக்கு, தெற்கு.
தெய்வம்: முருகன்.

--

.jpg)