சிம்மம்:
மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய.
பிடிவாதமும் வைராக்கியமும் சுதந்திர உணர்வும் உயர்ந்த லட்சியமும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே!
உங்கள் ராசி அதிபதி சூரியன் 5-லும், குரு 9-லும், யோக காரகன் செவ்வாய் ஜன்ம ராசியிலும் இருப்பது மகா யோகமாகும். ராஜக்கிரகங்கள் ஒருவருக்கொருவர் திரிகோண நிலையில் இருப்பதால் இந்தப் புத்தாண்டு ஆரம்பமே களை கட்டும். எண்ணங்கள் எல்லாம் இனிது நிறைவேறும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். செல்வ நிலை உயரும்.
தொலைதூரத் தொடர்பால் பயன் பெறுவீர்கள். லட்சுமி கடாட்சத்தைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடும்.
மகப்பேறும் மக்களால் பாக்கியமும் உண்டாகும். உயர் பதவி, பொறுப்புகள் உங்களைத் தேடிவரும். அரசியல்வாதிகள் தங்கள் கொள்கைகளுக்கு வரவேற்பு கூடப் பெறுவார்கள். அரசுப்பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். சனி 3-ல் தன் உச்ச ராசியில் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவதால் வெற்றி வாய்ப்புகள் மேலும் கூடும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பொது நலப்பணிகளில் ஈடுபாடு அதிகமாகும். 4-ல் ராகுவும் 12-ல் செவ்வாயும் இருப்பதால் அலைச்சல் அதிகமாகும்.
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். கைப்பொருளைப் பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. பயணத்தின்போதும் இயந்திரங்களின் பக்கம் நெருங்கும்போதும் எச்சரிக்கை தேவை.
17-5-2012 முதல் குரு 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. தொழிலில் இடமாற்றம் உண்டாகும். அதே நேரத்தில் தொழில் ரீதியாக ஓர் அதிர்ஷ்ட வாய்ப்பும் கூடிவரும். என்றாலும் குரு உங்கள் ராசிக்கு 2, 4, 6-ஆம் இடங்களைப் பார்க்கும் நிலை அமைவதால் பண வரவுக்குக் குறைவிராது. குடும்ப நலம் நாவன்மை கூடும். சீராகவே இருந்துவரும்.
எதிர்ப்புக்கள் குறையும். புதிய சொத்துக்கள் சேரும். பயணம் பயன்படும். கணிதம், எழுத்து, பத்திரிகை, ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றிகள் குவியும். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும்.
உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற ஸ்திர சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ பெறுவீர்கள். வாழ்க்கை வசதிகள் கூடும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்களால் ஓரளவு நலம் பெறுவீர்கள். டிசம்பர் பின்பகுதியில் எதிர்பாராத ஓர் அதிர்ஷ்ட வாய்ப்புக் கூடிவரும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு கிடைக்கும்.
ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும்.
துர்கையையும், முருகனையும் வழிபடுவது நல்லது.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.
திசை: வடமேற்கு, கிழக்கு, தெற்கு.
தெய்வம்: முருகன், ருத்திரன்(சிவன்).--
மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய.பிடிவாதமும் வைராக்கியமும் சுதந்திர உணர்வும் உயர்ந்த லட்சியமும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே!

.jpg)