உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய.

கடுமையாக உழைப்பதிலும் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் திறனும் பெற்ற மகர ராசி நேயர்களே!
இந்தப் புத்தாண்டு ஆரம்பத்தில் ராசிநாதன் சனி பலம் பெற்று 10-ல் தன் உச்ச வீட்டில் உலவுவது விசேடமாகும்.
சனியைக் குரு பார்ப்பதும் சிறப்புதான். சுக்கிரன் பெரும்பகுதிக் காலம் அனுகூலமாகவே உலவுவார். ராகு 11-ல் இருப்பதும் வரவேற்கத்தக்கதே ஆகும். இதனால் உங்கள் சுயபலம் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.
வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்பு கூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். அந்தஸ்தும், மதிப்பும் உயரவே செய்யும். உடல் நலம் சீராகும்.
பிறரால் போற்றப்படுவீர்கள். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் தேடிவரும். வெளிநாட்டுத் தொடர்பு வலுக்கும். தோல், எண்ணெய் வகையறாக்கள், கறுப்பு, கருநீல நிறப்பொருட்கள், போக்குவரத்துச் சாதனங்கள், விளைபொருட்கள், ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் ஆகியவை லாபம் தரும். 8-ல் செவ்வாயும், 12-ல் சூரியனும் இருப்பதால் உடன்பிறந்தவர்களாலும் தந்தையாலும் மன அமைதி கெடும். சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. அரசு விவகாரங்களில் விழிப்பு தேவை. தீ, மின்சாரம், ஆயுதம், வெடிப்பொருள்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும் போது பாதுகாப்பு அவசியமாகும்.
17-5-2012 முதல் குரு 5-ஆமிடம் மாறி, உங்கள் ராசியையும், 9, 11-ஆம் இடங்களையும் பார்ப்பதால் உடல்நலம் சீராகும். மதிப்பு உயரும். பொருளாதாரப் பிரச்னைகள் தீரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மகன், மகளுக்கு சுப காரியங்கள் நிகழும். திருமணம் ஆகாதவர்கள் அதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். பெற்றோர் நலம் சீராகும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும்.
விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். புதிய சொத்துக்கள் சேரும். நூதனமான முயற்சிகள் கைகூடும்.
ஆராய்ச்சியாளர்கள் புகழ் பெறுவார்கள். எதிர்ப்புகள் விலகும். அக்டோபர் மாதத்தில் செவ்வாயும் ராகுவும் 11 -ஆமிடத்தில் இணைந்து, குருவின் பார்வையைப் பெறுவதால் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் பெறுவீர்கள்.
சொத்துக்களால் வருமானம் கிடைக்கும். புதிய நிலம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். டிசம்பர் முன்பகுதியில் எதிர்பாராத ஓர் அதிர்ஷ்ட வாய்ப்பு கூடிவரும். டிசம்பர் பின்பகுதியில் வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.
விநாயகரைத் தொடர்ந்து வழிபடவும். வெள்ளிக்கிழமைகளில் தான, தர்மப்பணிகளில் ஈடுபடுவது நல்லது. ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 6, 8. வருடப் பின்பகுதியில் எண் 3-ம் நலம் தரும்.
திசை: வடக்கு, தென்கிழக்கு, மேற்கு, தென்மேற்கு.
தெய்வம்: ஐயப்பன், ஆஞ்சநேயர், மகாலட்சுமி.

--

.jpg)