விருச்சிகம்:
விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய.
சாமர்த்தியமாகப் பேசுவதிலும் செயல்படுவதிலும் வல்லவரான விருச்சிக ராசி நேயர்களே!
உங்கள் ராசிக்கு 6-ல் குருவும், 12-ல் சனியும் இருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. என்றாலும் ராசிநாதன் செவ்வாய் வலுத்து குருவின் பார்வையைப் பெறுவதுடன், சனியும் குருவின் பார்வையைப் பெறுவதால் சோதனைகள் விலகி, நன்மைகள் ஏற்படவே செய்யும்; கவலைப்படத் தேவையில்லை. செய்தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம்.
வீண் செலவுகள் குறையும். குடும்ப நலம் சீர்பெறும். 2-ஆம் வீட்டோன் குரு 6-ல் இருப்பதால் சிலர் கடன் வாங்கவேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாக வேண்டிவரும். 5-ஆம் வீட்டோன் 6-ல் இருப்பதால் மக்கள் நலனுக்காகச் செலவு செய்வீர்கள். என்றாலும் மக்களுக்கும் உங்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். குடும்பத்திலும் சில குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். ஜன்ம ராகு அலைச்சலைக் கூட்டுவார். கேது 7-ல் இருப்பதால் வாழ்க்கைத்துணைவராலும், பங்குதாரர்களாலும் சில இடர்ப்பாடுகள் ஏற்படவே செய்யும். அனுசரித்துப் போவது நல்லது.
உங்கள் மனம் புண்பட சிலர் பேசிவிட நேரலாம். சகிப்புத் தன்மை தேவை. கூடுமானவரை பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பழகுவது நல்லது. அணுகுமுறையை நெறிப்படுத்திக் கொண்டால் பிரச்னைகளைச் சமாளித்துவிடலாம். 17-5-2012 முதல் குரு 7-ஆமிடம் மாறி, உங்கள் ராசியையும் 3, 11-ஆம் இடங்களையும் பார்க்கப்போவதால் உடல்நலம் சீராகும். மன வலிமை கூடும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு வருடப் பின்பகுதியில் அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறுபாக்கியம் கிட்டும். கூட்டாளிகள் நலம் புரிவார்கள். கணவன் மனைவிக்கிடையே சலசலப்புக்கள் குறையும்.
##~##
ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள், உத்தியோகஸ்தர்கள், அறநிலையங்களில் பணிபுரிபவர்கள், ஜோதிடர்கள், குருமார்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். செல்வ வளம் பெருகும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.
ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் ஆதாயம் கொண்டுவரும். வீர, தீர, பராக்கிரமம் வெளிப்படும். வெற்றி வாய்ப்புக்கள் பெருகும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். மருத்துவர்கள் புகழ் பெறுவார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். சனிக்கு ஆகஸ்ட் முதல் குருவின் பார்வை அமையாமல் போவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகிவிடும்.
சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும். சனிக்காக சனிக்கிழமைதோறும் சாயங்காலத்தில் நல்லெண்ணெய் விளக்கேற்றவும்.
வருட முன்பகுதியில் குரு பிரீதி செய்யவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.
திசை: கிழக்கு, வடகிழக்கு, தெற்கு.
தெய்வம்: சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி.
விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய.
சாமர்த்தியமாகப் பேசுவதிலும் செயல்படுவதிலும் வல்லவரான விருச்சிக ராசி நேயர்களே!
உங்கள் ராசிக்கு 6-ல் குருவும், 12-ல் சனியும் இருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. என்றாலும் ராசிநாதன் செவ்வாய் வலுத்து குருவின் பார்வையைப் பெறுவதுடன், சனியும் குருவின் பார்வையைப் பெறுவதால் சோதனைகள் விலகி, நன்மைகள் ஏற்படவே செய்யும்; கவலைப்படத் தேவையில்லை. செய்தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம்.
வீண் செலவுகள் குறையும். குடும்ப நலம் சீர்பெறும். 2-ஆம் வீட்டோன் குரு 6-ல் இருப்பதால் சிலர் கடன் வாங்கவேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாக வேண்டிவரும். 5-ஆம் வீட்டோன் 6-ல் இருப்பதால் மக்கள் நலனுக்காகச் செலவு செய்வீர்கள். என்றாலும் மக்களுக்கும் உங்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். குடும்பத்திலும் சில குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். ஜன்ம ராகு அலைச்சலைக் கூட்டுவார். கேது 7-ல் இருப்பதால் வாழ்க்கைத்துணைவராலும், பங்குதாரர்களாலும் சில இடர்ப்பாடுகள் ஏற்படவே செய்யும். அனுசரித்துப் போவது நல்லது. உங்கள் மனம் புண்பட சிலர் பேசிவிட நேரலாம். சகிப்புத் தன்மை தேவை. கூடுமானவரை பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பழகுவது நல்லது. அணுகுமுறையை நெறிப்படுத்திக் கொண்டால் பிரச்னைகளைச் சமாளித்துவிடலாம். 17-5-2012 முதல் குரு 7-ஆமிடம் மாறி, உங்கள் ராசியையும் 3, 11-ஆம் இடங்களையும் பார்க்கப்போவதால் உடல்நலம் சீராகும். மன வலிமை கூடும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு வருடப் பின்பகுதியில் அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறுபாக்கியம் கிட்டும். கூட்டாளிகள் நலம் புரிவார்கள். கணவன் மனைவிக்கிடையே சலசலப்புக்கள் குறையும்.

--

.jpg)