மிதுனம் 2012 புத்தாண்டு ராசிபலன்

மிதுனம்:

மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய.

தெளிவான பேச்சும் சுறுசுறுப்பான செயல்பாடும் கொண்ட மிதுன ராசி நேயர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும், 6-ல் ராகுவும், 11-ல் குருவும் உலவும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறந்திருக்கிறது. துணிவான செயல்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். விளையாட்டு விநோதங்களிலும்; போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம், தொழில் விருத்தி அடையும். வெளிநாடு சென்று வேலை பார்க்க விரும்புபவர்களின் எண்ணம் இப்போது நிறைவேறும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம்.


திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். மக்களால் மன மகிழ்ச்சி பெருகும். மகன், அல்லது மகளுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டாகும். நிலம், மனை, வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். புதிய சொத்துக்களும் சேரும். சொந்தத் தொழில் செய்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பொன் நிறப் பொருட்கள் லாபம் தரும். தனவந்தர் சகாயம் கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். சாதுக்கள், மகான்கள் ஆகியோரது ஆசிகளைப் பெறுவீர்கள். கேளிக்கை, உல்லாசங்களில் நாட்டம் கூடும்.

கோசாரப்படி சனி 5-ல் உலவுவது சிறப்பாகாது என்றாலும் உங்கள் ராசிக்கு 9-ஆம் வீட்டோன் 5-ல் இருப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உண்டாகும்.

17-5-2012 முதல் குரு உங்கள் ராசிக்கு 12-ஆமிடத்துக்கு மாறுவது சிறப்பாகாது. சனிக்குக் குருவின் பார்வை அகலுகிறது. இதனால் மக்கள் நலம் பாதிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை நம்பி ஏமாற வேண்டாம். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். தொழில் அதிபர்கள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டப்படாமல் தப்பலாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பத்தகாத இடமாற்றம் ஏற்படும்.

வாழ்க்கைத்துணைவராலும், மக்களாலும் செலவுகள் அதிகரிக்கும். 10-ஆம் வீட்டோன் குரு 12-ல் இருப்பதால் தொழிலுக்காகக் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க வேண்டிவரும்.
அக்டோபர் மாதத்தில் செவ்வாய் 6-ஆமிடம் மாறி, ராகுவுடன் கூடுவதால் புதியவர்கள் அறிமுகமாவார்கள். போக்குவரத்துச் சாதனங்களால் ஆதாயம் கிடைக்கும். எதிரிகள் பயந்து ஓடுவார்கள். வழக்கில் வெற்றி காண வாய்ப்பு உண்டாகும். டிசம்பரில் உடல் நலம் சீராகும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்குக் கிடைக்கும்.

டிசம்பர் பின்பகுதியில் மக்கள் நலனில் அதிக கவனம் தேவைப்படும். ஆன்மிகவாதிகள் தங்கள் மதிப்பு உயரப் பெறுவார்கள்.

சனிப் பிரீதி செய்யவும். மே பின்பகுதியிலிருந்து குருப் பிரீதி செய்வது அவசியமாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.

எண் 8-ம் சில நேரங்களில் அதிர்ஷ்டம் தரும்.

திசை: வடக்கு, தென்கிழக்கு, மேற்கு.

தெய்வம்: மகாவிஷ்ணு, மகா லட்சுமி.
--