மீனம்: பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய.
தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ள மீன ராசிநேயர்களே !
புத்தாண்டு ஆரம்பத்தில் உங்கள் ராசிநாதன் குரு 2-ல் அமர்ந்து 6, 8, 10-ஆம் இடங்களையும், செவ்வாய், சனி, சூரியன் ஆகியோரையும் பார்ப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பேச்சாற்றல் வெளிப்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பொருள் வரவு அதிகமாகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடமுண்டு. உடல் நலம் சீராகும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். மக்களால் மன மகிழ்ச்சி கூடும். குழந்தைகளுக்கு ஆற்றவேண்டிய சுப காரியங்களை ஆற்றுவதற்கு ஏற்ற சந்தர்ப்பம் உருவாகும்.
கேது 3 -லும் செவ்வாய் 6-லும் பலமுடன் இருப்பதால் மனத்துணிவு கூடும். போட்டிகளில் வெற்றி கிட்டும். எதிரிகள் பயந்து ஒளிவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலபுலங்களின் சேர்க்கையைப் பெறுவீர்கள். சூரியன் 10-ல் இருப்பதால் அரசு உதவி கிடைக்கும். அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. நிர்வாக ஆற்றல் பெருகும். எதிரிகளாக இருந்தவர்களும் கூட மனம் மாறி, உங்களுக்கு உதவுவார்கள். 9-ல் புதனும் ராகுவும் இருப்பதால் தந்தையால் சில பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். தொலைதூரப் பயணத்தால் அதிகம் அனுகூலத்தை எதிர்பார்க்க இயலாமல் போகும். 7-ஆம் வீட்டுக்கு முன்னும் பின்னும் பாபக் கிரகங்கள் இருப்பதால் வாழ்க்கைத்துணைவரின் நலனில் கவனம் தேவைப்படும். கூட்டாகத் தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது.
17-5-2012 முதல் குரு 3-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. செல்வாக்கும் மதிப்பும் குறையும். பொருளாதாரப் பிரச்னை தலைதூக்கும். பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். தொழில் அதிபர்கள் அகலக்கால் வைக்கலாகாது. யாருக்கும் ஜாமீன் கொடுக்கவேண்டாம். செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் காண அரும்பாடுபட வேண்டிவரும். விரும்பத்தகாத இடமாற்றமோ, நிலை மாற்றமோ ஏற்படும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சூழும். சொத்துக்களை விற்க வேண்டிய நிலைக்கும் சிலர் ஆளாகலாம். தொழில் சம்பந்தமான வழக்குகளைச் சந்திக்க வேண்டிவரும். குருவின் பார்வை பலத்தால் வாழ்க்கைத்துணை நலம் சீராகும். தந்தையாலும், மூத்த சகோதர, சகோதரிகளாலும் ஓரளவு அனுகூலம் உண்டாகும். சனி 8-ல் இருப்பதாலும் வருடப் பின்பகுதியில் சனிக்குக் குருவின் பார்வை கிடைக்காமல் போவதாலும் வீண் விரயங்கள், இழப்புகள் ஏற்படும். நீண்ட காலமாக
நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஜாதகப்படி மாரக தசை நடப்பவர்களுக்கு உயிர்க் கண்டம் ஏற்படும். தொழிலில் போட்டியாளர்கள் அதிகரிப்பர்.
மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படும். அக்டோபர் முதல் பிரச்னைகள் குறையத் தொடங்கும். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். டிசம்பர் பின்பகுதியில் முக்கியமான ஓரிரு காரியங்கள் நிறைவேறும். சொத்துக்கள் வாங்குவீர்கள். அரசு ஆதரவு கிடைக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசுப்பணியாளர்கள் ஆகியோருக்கெல்லாம் அனுகூலமான போக்குத் தென்படும்.
சனிக்கிழமைகளில் சனிப் பிரீதி செய்வது அவசியமாகும். மே மாதப் பின்பகுதியிலிருந்து குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்து வருவது நல்லது.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 7, 9.
திசை: வடமேற்கு, வடகிழக்கு, தெற்கு.
தெய்வம்: சிவன், சக்தி, முருகன்.
தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ள மீன ராசிநேயர்களே !
புத்தாண்டு ஆரம்பத்தில் உங்கள் ராசிநாதன் குரு 2-ல் அமர்ந்து 6, 8, 10-ஆம் இடங்களையும், செவ்வாய், சனி, சூரியன் ஆகியோரையும் பார்ப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பேச்சாற்றல் வெளிப்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பொருள் வரவு அதிகமாகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடமுண்டு. உடல் நலம் சீராகும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். மக்களால் மன மகிழ்ச்சி கூடும். குழந்தைகளுக்கு ஆற்றவேண்டிய சுப காரியங்களை ஆற்றுவதற்கு ஏற்ற சந்தர்ப்பம் உருவாகும்.கேது 3 -லும் செவ்வாய் 6-லும் பலமுடன் இருப்பதால் மனத்துணிவு கூடும். போட்டிகளில் வெற்றி கிட்டும். எதிரிகள் பயந்து ஒளிவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலபுலங்களின் சேர்க்கையைப் பெறுவீர்கள். சூரியன் 10-ல் இருப்பதால் அரசு உதவி கிடைக்கும். அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. நிர்வாக ஆற்றல் பெருகும். எதிரிகளாக இருந்தவர்களும் கூட மனம் மாறி, உங்களுக்கு உதவுவார்கள். 9-ல் புதனும் ராகுவும் இருப்பதால் தந்தையால் சில பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். தொலைதூரப் பயணத்தால் அதிகம் அனுகூலத்தை எதிர்பார்க்க இயலாமல் போகும். 7-ஆம் வீட்டுக்கு முன்னும் பின்னும் பாபக் கிரகங்கள் இருப்பதால் வாழ்க்கைத்துணைவரின் நலனில் கவனம் தேவைப்படும். கூட்டாகத் தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது.

--

.jpg)