கும்பம்:
அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய.
பிறருக்கு உதவும் நல்லிதயம் கொண்ட கும்ப ராசி நேயர்களே !
இந்தப் புத்தாண்டில் குரு, செவ்வாய், சனி ஆகிய முக்கியமான கிரகங்கள் கோசாரப்படி அனுகூலமாக உலவாததால் விசேடமான நற்பலன்களை எதிர்பார்க்க இயலாமல் போகும். ஜனன கால ஜாதகத்தில் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை. ஜாதக பலமும் இல்லாதவர்கள் இறைவழிபாட்டிலும் கிரக வழிபாட்டிலும் முழு நம்பிக்கையுடன் ஈடுபட்டால் சங்கடங்களைக் குறைத்துக் கொள்ள முடியும். பொருளாதாரப் பிரச்னை ஏற்படும். யாருக்கும் ஜாமீன் கொடுக்கலாகாது. பணம் கொடுக்கல்-வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. பிறரால் ஏமாற்றப்பட நேரலாம்.
உத்தியோகஸ்தர்கள், ஆன்மிகவாதிகள், தொழில் அதிபர்கள், மருத்துவர்கள் ஆகியோர் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றிவந்தால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். எதிலும் அவசரம் கூடாது. கெட்டவர்களின் தொடர்பை விட்டு விலகுவது அவசியமாகும். நல்லவர்களின் மனம் புண்படும்படி நடக்கலாகாது. குடும்பப் பெரியவர்களின் ஆலசனைகளை மதித்து ஏற்றுக் கொள்வது நல்லது. செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை.
4-ல் கேது இருப்பதால் உங்கள் நலனிலும், உங்கள் தாய் நலனிலும் கவனம் செலுத்த வேண்டிவரும். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். சூரியன், புதன், சுக்கிரன், ராகு ஆகியோரது அனுகூலமான சஞ்சாரத்தால் அளவோடு நலம் உண்டாகும். அரசாங்கத்தாரால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு மாமூலான வளர்ச்சி பாதிக்காது. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்தினால் மட்டுமே ஓரளவு வளர்ச்சி காணமுடியும். கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது.கலைஞர்களுக்கு அளவோடு நலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பயணத்தால் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். போக்குவரத்துச் சாதனங்கள், தோல் பொருட்கள்,
ஆடை, அணிமணிகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். 17-5-2012 முதல் குரு 4-ஆமிடம் மாறுவதும் கோசாரப்படி சிறப்பாகாது. அலைச்சலும் உழைப்பும் கூடவே செய்யும். மக்களின் நடத்தையில் கவனம் தேவை. வீண் செலவுகள் குறையும். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொழில் ரீதியாக வளர்ச்சி காணலாம். இயந்திரப்பணிகள் லாபம் தரும். புதிய சொத்துக்கள் சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் பெருகும். பிரச்னைகளைச் சுலபமாகச் சமாளிப்பீர்கள்.
வியாழக்கிழமைகளில் குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது. 4-ல் உள்ள கேதுவுக்காக விநாயகரையும் தொடர்ந்து வழிபடவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 8.
திசை: வடக்கு, தென்கிழக்கு, மேற்கு.
தெய்வம்: ஆஞ்சநேயர், ஐயப்பன், மகாலட்சுமி.
அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய.
பிறருக்கு உதவும் நல்லிதயம் கொண்ட கும்ப ராசி நேயர்களே !
இந்தப் புத்தாண்டில் குரு, செவ்வாய், சனி ஆகிய முக்கியமான கிரகங்கள் கோசாரப்படி அனுகூலமாக உலவாததால் விசேடமான நற்பலன்களை எதிர்பார்க்க இயலாமல் போகும். ஜனன கால ஜாதகத்தில் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை. ஜாதக பலமும் இல்லாதவர்கள் இறைவழிபாட்டிலும் கிரக வழிபாட்டிலும் முழு நம்பிக்கையுடன் ஈடுபட்டால் சங்கடங்களைக் குறைத்துக் கொள்ள முடியும். பொருளாதாரப் பிரச்னை ஏற்படும். யாருக்கும் ஜாமீன் கொடுக்கலாகாது. பணம் கொடுக்கல்-வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. பிறரால் ஏமாற்றப்பட நேரலாம்.உத்தியோகஸ்தர்கள், ஆன்மிகவாதிகள், தொழில் அதிபர்கள், மருத்துவர்கள் ஆகியோர் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றிவந்தால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். எதிலும் அவசரம் கூடாது. கெட்டவர்களின் தொடர்பை விட்டு விலகுவது அவசியமாகும். நல்லவர்களின் மனம் புண்படும்படி நடக்கலாகாது. குடும்பப் பெரியவர்களின் ஆலசனைகளை மதித்து ஏற்றுக் கொள்வது நல்லது. செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை.

--

.jpg)