கன்னி:
உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய.
இனிமையாகவும் திறமையாகவும் பேசும் கன்னி ராசி நேயர்களே!
உங்கள் ராசிக்கு 8-ல் குருவும், 2-ல் சனியும், 12-ல் செவ்வாயும் உலவும் நேரத்தில் இப்புத்தாண்டு பிறக்கிறது. கோசாரப்படி முக்கியக் கிரகங்கள் விசேடமாக உலவாததால் அதிகம் நன்மைகளை எதிர்பார்க்க இயலாது என்றாலும் அளவோடு நலம் உண்டாகும். சனியும் சுக்கிரனும் பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும், சனியையும், செவ்வாயையும் குரு பார்ப்பதாலும் குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். பண வரவு அதிகமாகும்.
ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்களால் ஆதாயம் கிடைக்கும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்களால் வருமானம் கூடும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். 3-ல் ராகு இருப்பதால் மனத்துணிவு கூடும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். சிறுசிறு பயணங்களை மேற்கொள்ளவும், அதனால் பயன் பெறவும் வாய்ப்பு உண்டாகும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதுடன், வீண் செலவுகளைத் தவிர்ப்பதும் அவசியமாகும்.
17-5-2012 முதல் குரு 9-ஆமிடம் மாறுவது விசேடமாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல்நலம் சீராகும். புதிய பதவி, பட்டங்கள் தேடி வரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும்.
மகப்பேறும் மக்களால் பாக்கியமும் உண்டாகும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். மாணவர்கள் மந்த நிலை விலகப் பெறுவார்கள். உயர் படிப்பு படிக்க வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு இல்லறம் நல்லறமாகத் திகழும். பொருளாதார நிலை உயரும். கடன் தொல்லைகள் குறையத் தொடங்கும். தெய்வ தரிசனம், சாது தரிசனம் ஆகியவை கிடைக்கும். தொழில் அதிபர்கள் வெளிச்சமான சூழ்நிலையைக் காண்பார்கள். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மேடைப் பேச்சாளர்கள், மருத்துவர்கள், ஆன்மிக வாதிகள், எழுத்தாளர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். பெற்றோரால் நலம் பெருகும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். அக்டோபர் மாதத்தில் ஓர் சாதனை ஆற்றுவீர்கள். புதிய சொத்துக்கள் சேரும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் பொருளாதாரச் செழிப்பு உண்டாகும்.
டிசம்பர் முன்பகுதியில் அரசு விவகாரங்களில் அனுகூலமான போக்கைக் காணலாம். முக்கியப் பொறுப்புக்களும் பதவிகளும் கிடைக்கும்.
வருட முன்பகுதியில் குரு, செவ்வாய் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்யவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 8.
திசை: வடக்கு, தென்கிழக்கு, மேற்கு.
தெய்வம்: மகாவிஷ்ணு.
உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய.இனிமையாகவும் திறமையாகவும் பேசும் கன்னி ராசி நேயர்களே!

--

.jpg)