மட்டக்களப்பு மீள்குடியேற்றப் பகுதியில் மினி சூறாவெளித் தாக்கம் வீடுகள் பல பயன்தரு மரங்கள் சேதம்


  (பிரணி)

மட்டக்களப்பு படுவான்கரை பகுதியான வெல்லாவெளிப் பிரதேசத்திற்குட்பட்ட  புதுமுன்மாரிச்சோலை, றாணமடு, சின்னவத்தை, பாலையடிவடடை, மாலையர்கட்டு, பலாச்சோலை, போன்ற பல பின்தங்கிய எல்லைக் கிராமங்களில் நேற்று மாலை தாக்கிய மினி சூறாவெளி காரணமாக பலத்தவீடுகள் சேதமடைந்துள்ளதுடன் பல பயன்தரும் மரங்களும் முறிந்துள்ளன.
அந்தவகையில் புதுமுன்மாரிசசோலை;, சின்னவத்தை;, பாலையடிவட்டை, றாணமடு, மாலையர்கட்டு, போன்ற கராமங்களில் மொத்தமாக 240 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாரமத்துவ பிரதிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், தெரிவித்துள்ளார்
இது இவ்வாறு இருக்க நூற்றுக்கு மேற்பட்ட பல பயன்தரும் மரங்களும் சேதமைந்தள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த கிராம சேவையளர்களும் பொதுமக்களும்; தெரிவிக்கின்றனர்.
இந்நிலமையினை பார்வையிடுவதற்காக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தயோகஸ்தர் சிவகுமார், மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்ப பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன். மற்றும் இலங்கைச் செஞ்சிலுவைச்சங்க மட்டக்களப்பு கிளை அதிகாரிகள் போன்றோர் பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும் பார்வையிட்டுள்ளனர்.
மினி சூறாவெளியினால் தமது இருப்பிடங்களை இழந்த அப்பகுதி மக்கள் தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருந்து பாதிக்கப்படட தமது இருப்பிடங்களை துப்பரவு செய்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
சேத விபரங்கள்; போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திநூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகஸ்தர் சிவகுமார்  மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், ஆகியோர் தெரிவித்தனர்த்தனர்