கல்லடி பாலத்தை பெருமளவான மக்கள் கண்டுகளித்துவருகின்றனர்

(கிருஸ்ணா)

இலங்கையின் மூன்றாவது பெரிய பாலமாகவும் கிழக்கு மாகாணத்தின் வரலாற்று முக்கியத்துவமிக்க பாலமாகவும் உள்ள மட்டக்களப்பு கல்லடி பாலம் திறந்துவைக்கப்பட்டதை தொடர்ந்து நாடெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பாலத்தினை பார்வையிட்டுவருகின்றனர்.

இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவால் இந்த பாலம் திறந்துவைக்கப்பட்ட நிலையில் பெருமளவானொர் இந்த பாலத்தினை கண்டுகளித்துவருகின்றனர்.

இலங்கையின் கிழக்கையும் தெற்கையும் இணைக்கும் மிக முக்கிய பாலமாகவுள்ள இந்த பாலத்தின் நிர்மாணப்பணிகள் கடந்த ஐந்து வருடங்களாக பெரும் பின்னடைவை எதிர்கொண்டுவந்த நிலையில் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டு இன்று ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது நாடெங்கிலும் இருந்து பெருமளவானோர் வருகைதந்து கண்டுகளித்தவண்ணமுள்ளனர்.