450 மாணவர்களுக்கு சமுர்த்தி "சிப்தொற" புலமைப்பரிசில் வழங்கல் நிகழ்வு


( சுரேந்திக்கா )
சமுர்த்தி ஆணையாளர் நாயகத் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்டுவரும் சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு  இன்று காலை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக "டோபா" மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மீள் குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் கலந்து கொண்டார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரண உதவிபெறும் குடும்பங்களிலிருந்து கடந்த 2012ம் ஆண்டில் க.பொ.த சா.தரம் சித்தியடைந்து தற்போது உயர்தரம் 1ம்வருடத்தில் பயின்றுகொண்டிருக்கும் மாணவர்களை நேர்முகப்பரீட்சையில் சுற்றறிக்கைக்கு அமைவாக தெரிவு செய்து சமுர்த்தி திணைக்களத்தினால் ஒவ்வொரு மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் கல்வி வளர்ச்சிக்காக 2014ம் ஆண்டில் உயர்தரப் பரீட்சை எழுதும்வரை  மாதாந்தம் 1000/= பணமும் வழங்கப்பவுள்ளது. இதில் மட்டக்களப்பு மாவட்த்திலிருந்து  பிரதேச செயலக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட 450 மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட  மீள் குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த புலமைப்பரிசில்களை பெற வந்திருக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து மிகவும் கஸ்டத்தின் மத்தியில் கற்றுக்கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் கல்விகற்று ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்க வேன்டும்.

நாங்கள் கல்விகற்கும் காலங்களில் இம் மாவட்டத்தில் அதிகமான பிரதேசங்களில் மின்சாரம் இல்லை. அதிகமானோர் மண்ணெண்ணைய் குப்பி விளக்குடன்தான் கல்வி கற்றார்கள். அப்போதும் கூட பல புத்திஜீவிகள், வைத்தியர்கள்,பொறியியலாளர்கள் உருவாக்கப்பட்டார்கள்.
ஆனால் இன்றைய காலத்தில் பெரும்பாலான அனைத்து இடங்களிலும் எம்மால் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. சகல துறைகளிலும் கற்பதற்கு அரசாங்கள் வசதியளித்துள்ளது. மேலும்,  வேறு மாவட்டத்தை விடவும் எமது வடக்கு கிழக்கில் கல்வி விடயத்தில் அரசாங்கம் சகலவிதமான வசதிகளையும் வழங்கியுள்ளது. ஒழுக்கமுடன் கல்வி கற்பது மட்டும்தான் உங்கள் வேலை.

தொடர்ந்து பேசுகையில், இப்போது யுத்த காலம் இல்லை யுத்தம் வேன்டாம் என்றுதான் நான் யுத்தத்தை கைவிட்டு இங்கு வந்திருக்கின்றேன். யுத்தம் நடந்துகொண்டிருந்தால் இப்போது இங்கு வந்திருக்கும் உங்களில் பலர் யுத்தகளத்தில்தான் இருந்திருப்பீர்கள்.  நாம் அனைவரும் யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள். இதனால் நன்றாக படித்து ஒரு நல்ல பிரஜைய்களாக வாரவேன்டும்.

என தனது தனதுரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் பூ.குணரெட்ணம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறுக், மீள் குடியேற்ற பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.