தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வாசிகசாலை மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீடத்திற்கான கட்டடத் தொகுதி திறப்பு விழா

(எம்.ஏ.றமீஸ்)
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுமார் 360 மில்லியன் ரூபா செலவில் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அஷஃரப் ஞாபகார்த்த வாசிகசாலை மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீடத்திற்கான கட்டடத் தொகுதி திறப்பு விழா உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இன்று(20) இடம்பெற்றது.



இதன்போது   வர்த்தக முகாமைத்துவ பீடத்திற்கான கட்டடம் மற்றும் நவீன நூலகம் ஆகியவற்றை நாடா வெட்டி திறந்து வைத்ததன் பின்னர் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள் வர்தக மற்றும் முகாமைத்துவ பீடத்திற்கான கட்டடத்தின் நிமைவுப் படிகத்தினை திரை நீக்கம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் நூதன சாலையினை  ஜனாதிபதி பார்வையிட்டார். இதனபோது கலை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுடன் ஜனாதிபதி புகைப்படம் எடுத்ததன் பின்னர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மூவின சமூகங்களையும் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆளணியினருடன் உரையாடினார். இந் நிகழ்வில் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.