மண்முனை பாலம் திறப்பு விழாவானது படுவான்கரை மக்களின் கனவு நனவாகிய சந்தோசமான நாளாகும் - ஜனாதிபதி

(வரதன்)
மண்முனைப் பாலம் மக்களின் பாவனைக்காக இன்று மாலை ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்பட்டது இங்கு உரையாற்றிய ஜனாதிபதி,

'இப்பகுதி மக்களின் அபிவிருத்திக்குஇப்பாலம் சிறந்ததொரு வரப்பிரசாதமாகும். ஏதிர்க் கட்சிகள் என்ன சொன்னாலும் நாம்வுழங்கிய வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றுவோம்.இவ் புதிய பாலத்தினால் இப் பகுதி மக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் வராது'. என்பதை தெரிவித்த ஜனாதிபதி

'நான் கடந்த காலங்களில் நீதிமன்ற வேலைகளுக்கு  மட்டு நகருக்கு விஜயம் செய்த போது, ஷாம் தம்பிமுத்துவின் இல்லத்திற்குச் சென்று தனது வழக்கறிஞர் பணிகளை நிறைவேற்றிய சந்தர்ப்பங்களை இங்கு ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.

இவ் நிகழ்வில், ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் நொபுகிரோ றோபோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித், உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத், பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மீளகுடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.