கால் நடைவளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் ஆரம்பித்த டெங்கு கட்டுப்பாடு வேலைத்திட்டம் நிறைவு

மட்/கால் நடைவளர்ப்போர் கூட்டுறவுச்சங்கத்தின் ஏற்பாட்டில்  சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் நிதிஅணுசரணையுடன் விழிப்புணர்வு திட்டத்தின்கீழ்கடந்த 17ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட டெங்கு நுளம்பு கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் கடந்த திங்கள் கிழமையுடன் நிறைவு பெற்றுள்ளது.

மேற்படி வேலைத்திட்டம் மட்/கால் நடைவளர்பேர் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் ம.நவறஞ்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் - கிழக்கு திட்ட இணைப்பாளர் T.மயூரன், பொதுசுகாதாரப் பரிசோதகர் V.ரமேஸ்குமார்,  
போன்றோர் கலந்துகொண்டனர்.

இத் திட்டத்தின்கீழ் இப் பிரதேசத்திலுள்ள புதூர்,சேற்றுக்குடா, வீச்சுக்கல்முனை, திமிலைதீவு, வலையிறவு ஆகிய ஐந்து கிராமங்களுக்கும் டெங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகளினால் டெங்கு நுளம்பு  இனம் காணப்பட்ட பிரதேசங்களுக்கு புகையூட்டல் நிகழ்வு கடந்த 17ம் திகதி ஆரம்பிக்கப்பட்டடு கடந்த 21ம் திகதி சிறந்த முறையில் நிறைவுபெற்றது.

இத் திட்டம் இப் பிரதேசத்தில் மிக பயனுள்ளதாக அமைந்திருந்தது. இதனை நடைமுறைப்படுத்திய மட்/கால்நடைவளர்பேர் கூட்டுறவுச்சங்கம் மற்றும் உதவி வழங்கிய சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தினருக்கும் இப்பிரதேச மக்களாலும், கிராம மட்ட அமைப்புக்கள்மற்றும்  இளைஞர் அமைப்புகளாலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.