மட்டக்களப்பில் மொழிக்கற்கைகள் ஆரம்பம்

மட்டக்களப்பு, இருதயபுரம்-மேற்கு, 7ம் குறுக்கில் 'அறிகைநிலை விஞ்ஞான நிறுவகம் (Institute of Cognitive Science) ' 26.04.2014 (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படுகிறது. மனிதவியல் (Humanities) கற்கைநெறிகள் விஞ்ஞானவாய்வு அடிப்படையில் அணுகப்படுவதன் முக்கியத்துவம் உணரப்பட்டதன் அடிப்படையில் இது உருவாகிறது.

இதன் முதற்கட்டமாக பல மொழிக்கற்கைகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

ஆங்கிலம் : அனைத்து தரப்பினருக்குமுரியது
சிங்களம்  : அனைத்து தரப்பினருக்குமுரியது
பிரஞ் (French)  : அனைத்து தரப்பினருக்குமுரியது
தமிழ் : தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்க்குரியது

(மொழிமூலம் ஆங்கிலம்) வயது, தொழில், மொழித் தேவை என்பவற்றின் அடிப்படையில் வகுப்புக்கள் பிரிக்கப்படும். இக்கற்கை நெறிகளில் இணைய விரும்புவேர் இணைப்பாளருடன் தொடர்பு கொள்ளவும். பதிவுகள் 26.04. 2014 காலை 10 மணிமுதல் இடம்பெறும்.

இணைப்பாளர்: 0712016934