மாங்காடு இளைஞர் விளையாட்டு கழகத்தினால் புத்தாண்டு விளையாட்டு விழா

பிறந்துள்ள ஜய வருட பிறப்பினை முன்னிட்டு மாங்காடு இளைஞர் விளையாட்டு கழகத்தினால் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் மாங்காடு பொது விளையாட்டு மைதானத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

மாங்காடு இளைஞர் விளையாட்டு கழகத்தின் தலைவர் ம.சத்தியமோகன் மற்றும் மாங்காடு பொது மக்களின் ஆதரவுடன் நடைபெற்ற இக் கலை கலாசார விளையாட்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ அமைச்சர் அல்காஜ் பஷீர் சேகுதாவூத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்

இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக காலையில் மரதன் ஓட்டமும் மாங்காடு மாணிக்கபிள்ளையர் ஆலயத்தில் இருந்து களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் முன்றலில் முடிவடைந்ததுடன் தொடர்ந்து பிற்பகல் 3:00மணி வரையில் ஏனைய நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்றது அதில் வழுக்கு மரம் ஏறுதல் இகைறு இழுத்தல் ,கிடுகுபின்னுதல்,நிறமுட்டி உடைத்தல் மற்றும் உள்ளூர் கழகங்களுக்கான அஞ்சல் ஓட்டம் போன்ற நிகழ்வுகளுடன் சிறுவர்களுக்கான  விளையாட்டும் நடைபெற்றது

இங்கு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கு பிரதம அதிதிகளால் பரிசில்களை வழங்கி வைக்கபட்டன