மட்டக்களப்பு மாவட்ட வரலாற்றில் முதல்தடவையாக நாளை கோறளைப்பற்று வடக்குபிரதேச இளைஞர்களை ஒன்றினைக்கும் மாநாடு

(சித்தாண்டி நித்தி) மட்டக்களப்பு மாவட்ட வரலாற்றில் முதல்தடவையாக கோறளைப்பற்று வடக்கு பிரதேச  செயலக பிரிவிலுள்ள அனைத்து இளைஞர்களையும் ஒன்றினைக்கும் மாபெரும் மாநாடு மற்றும் இளைஞனர்பேரணி நாளை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் வாகரை மாக வித்தியாலய பிரதான மண்டபத்தில் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது. 

கோரளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனைத்து இளைஞர்களை ஒன்றினைக்கும் மாபெரும் மாநாடு செயலமர்வின் மூலம் இன்றைய இளைஞர்கள் நாளைய எதிர்கால சவாலை எதிர்கொள்ளும் விதம், இளைஞர்களின் சக்தியை வலுவூட்டல் மற்றும் தொழில்துறை, கல்வித்துறையில் இளைஞர்களுக்கு உள்ள சவால்களுக்கு முகங்கொடுத்து அவற்றை இலகுவாக அடையக்கூடி வழிமுறைகள், பொருளாதார ரீதியில் இளைஞர்களை உள்ளவாங்குவது தொடர்பான வழிமுறை போன்ற எண்ணக்கருக்களை அடிப்படையாக கொண்டு இம்மாநாடு நாளை நடைபெறவுள்ளது.

பிரதேச இளைஞர்களை ஒன்றினைக்கும் மாபெரும் மாநாடு மற்றும் இளைஞனர்பேரணி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் தொழில்நுட்ப கல்லூரி அதிகாரிகள் வாகரை தலைமை இராணுவ பொறுப்பதிகாரி இளைஞர்சேவகைள் மன்ற இணைப்பாளர் மற்றும் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.