இஞ்ஞாசியார் பங்கில் இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை தியாணித்த திருச்சிலுவைப்பாதை பவணி

(உ.உதயகாந்த்)

உலக கத்தோலிக்க திருச் சபையானது நேற்றைய தினம் (18) உலக மாந்தர்களின் மீட்புக்காய் தன்னுயிர் தியாகம் புரிந்த இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் ஊடாக அவரின் இறப்பினை நினைவுகூர்ந்து பெரிய வெள்ளியென அனுஷ்டிக்கப்படும் நேற்றைய தினத்தில் எமது நாட்டிலும் அனைத்து பங்குகளிலும் பெரிய திருச் சிலுவைப்பாதை நிகழ்வுகள்  நடைபெற்றன.

அந்த வகையில் கல்லடி - டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய பங்கு திருச்சபையின் பங்குத்தந்தை ஜீவராஜ் அடிகளார் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு நடாத்தப்பட்டது.

இத் திருச்சிலுவை பாதை நிகழ்வானது ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி திருச்செந்தூர் வழியாக சென்று கல்லடி வேலூர் ஊடாக கல்லடி மனிகூட்டு கோபுரத்தினை அடைந்து அங்கிருந்து கல்லடி பாலத்தினை அடைந்து மீண்டும் ஆலயத்தினை வந்தடைந்தது.

இந்நிகழ்வில் பங்கிலிருந்தும் ,அயல் பங்குகளிலிருந்தும் அதிகளவிலான இறைமக்கள் பங்குகொண்டதும் குறிப்பிடத்தக்கது.