அம்பாறை மாவட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் நாளுக்குநாள் அதிகரிப்பு ! மனித உரிமைகள் ஆர்வலர் பி.ஸ்ரீகாந்த்

(காரைதீவு நிருபர்)
அம்பாறை மாவட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இதனை விரைந்து தடுக்க உடனடியாக களத்தில் இறங்கவேண்டும் என்கிறார் மனித உரிமைகள் ஆர்வலர்  பி.ஸ்ரீகாந்த் .
மனித அபிவிருத்தித்தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்னையா ஸ்ரீகாந்த் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது'
கடந்த 2011 ஆம் ஆண்டு சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரித்த மாவட்டங்களில் ஒன்றாக அம்பாறை மாவட்டம் கண்காணிக்கப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக கரையோர பிரதேசத்தை அண்டிய பிரதேசங்களில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்கள் கூடுதலாக காணப்பட்டது. 
அப்போது அரசசார்பற்ற நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் ஒன்றிணைந்து குறைப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தது. அதன் பலனாக 2012, 2013 ஆம் காலப்பகுதியில் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் கணிசமான அளவு குறைந்திரு;தந்தது. தற்போது எம் அமைப்பு தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றபோதிலும் 2014 ஆம் ஆண்டு முதற்காலப்பகுதியில் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரித்துள்ளது என தெரியவருகின்றது. 
இதில் பாலியல் துஸ்பிரயோகமே அதிகமாக காணப்படுகின்றது. குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குடும்ப உறவுகள், சேவை பெறும் உத்தியோகஸ்தர்கள், நட்புறவு நண்பர்கள், அயலவர்கள் என்பவர்களின் காம இம்சைகளுக்கு சிறுமிகள் இலக்காகின்றனர். 
இதன் போது பாதிக்கப்பட்ட ஓரிரு சிறுமிகள் 3 மாதம் கடந்த நிலையிலும் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். இது கவலைக்குரிய விடமாகும். 

வயதுக்கு வந்த சிறுமிகளை கற்பழிப்பது போல இளம் சிறுமிகளை கற்பழித்துள்ளதாக அண்மையில் நடந்த  சம்பவ மகாநாடு ஒன்றின் போது பொலிஸார் தெரிவித்தனர். அதற்கான வைத்திய சான்றிதழ்களும் தங்களிடம் இருப்பதாக தெரிவித்தனர். 

சிலர் குறிப்பாக ஆசிரியர் சமூகம் ஒரு சமூகத்தை நன்னடத்தை படுத்த வேண்டிய பெயரைப் பெற்றுள்ளது. ஓரிரு ஆசிரியர்களின் இழிவான செயல்களின் காரணமாக ஒட்டுமொத்த ஆசிரியர் குழாமே குறித்துகாட்ட வேண்டிய துர்பாக்கி நிலைக்கு ஆளாகின்றனர். இதன் போது ஏனைய ஆசிரியர்களும் உள ரீதியாக பாதிப்புக்குள்ளாகுவது வருந்ததக்க விடமாகும். இது இவ்வாறாயினும் ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. ஒரு ஆசிரியர் செய்யும் தவறை குறிப்பாக சிறுபிள்ளைகளை பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கு உள்ளாக்குவது தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டிய குற்றமாகும். இதன் போது ஏனைய ஆசிரியர்கள் சிறுவர் தொடர்பாக வேலை செய்யும் அமைப்புக்களுடனும், அதிகாரிகளுடனும் இணைந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு வளமுள்ள சமூதாயத்தை உருவாக்க உங்களுடைய வளப்பங்கு அளப்பெரியது என தெரிவித்தார். 

தனது மகளென கூட எண்ணாது இன்னும் பல தந்தையர்கள் உள்ளனர். கடந்த 4 மாத காலப்பகுதியில் கூடுதலான முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் கனிசமானவை தனது சொந்த மகளை பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் செய்தல், பாலியல் சேட்டைகள் செய்தல் போன்ற முறைப்பாடுகள் காணப்படுகின்றது. குறிப்பாக தாய் வெளிநாட்டிற்கு சென்றுள்ள குடும்பங்களில் உள்ள குழந்தைகள் இதற்கு இலக்காகின்றனர். இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தாலும் இன்னும் எமது சமூகத்தில் பலர் சமூக கலாச்சாரம் என்ற போர்வையில் மூடிமறைத்து வாழ்கின்றனர். 

மேற்படி விடயங்கள் தொடர்பாக பிராந்தியத்தில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் ஏனைய சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இதனை குறைப்பதற்கு மாவட்ட ரீதியான செயற்பாடு ஒன்றிணை துரிதபடுத்த வேண்டியுள்ளார் எனவும் தெரிவித்தார். 
இதே போன்று வளமுள்ள சமூகத்தை கட்டியெழுப்ப சிறுவர்களின் சகல உரிமைகளையும் பாதுகாக்க இன மத பேதமின்றி ஒன்றிணைவோம். அதே போன்று இளைஞர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், கிராமிய அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் என அழைப்பு விடுத்துள்ளார் தொடர்புகளுக்கு :- 077 3015350067 2220142077 3740510