மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சியினால் நீர் நிலைகள் முற்றாக வற்றும் அபாயம்

(சிவம்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் நீர்நிலைகள் வற்றிவருகின்றன. இவ்வறட்சி; காரணமாக வயோதிபர்களும் மற்றும் சிறுவர்களும் இலகுவில் நோய்த் தொற்று ஏற்படுவதற்கான காலநிலை உள்ளது என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

விவசாயத்தை நம்பியிருக்கும் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை  மு.ப. 11.30 மணிக்கு வெப்பநிலை 34.4 பாகை செல்சியஸாக உள்ளது என வானிலை நிலையப் பொறுப்பதிகாரி கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.

இவ் அளவீடுகள் தலா முண்று மணித்தியாலங்களுக்கு ஒருதடவை அளவிடப்படுவதாகவும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆகக்கூடுதலாக 31.9 பாகை செல்சியஸாகப் பதிவாகியபோதிலும்; மாவட்டத்தின் வெப்பநிலை சராசரியாக 30 பாகை செல்சியஸாகவே காணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.