மண்முனை பாலம் இன்று திறப்பு - கடந்த நினைவுகள்

(படுவான் பாலகன்) படுவான்கரையையும் எழுவான்கரையையும் பிரிக்கும் வாவியாக காணப்பட்டது. மண்முனைத்துறை வாவி இவ் வாவி ஊடாக   விவசாயி, உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள், அரசியல் வாதிகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் போக்குவரத்து செய்கின்ற ஓர் இடம்.

இவ்வாவிக்கு பாலம் அமைக்கப்பட்டு இன்று(19) சனிக்கிழமை பி.ப.04.00மணிக்கு அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.

இவ்வாவியின் ஊடாக பயணித்த நினைகளை திரும்பி பார்க்கின்ற போது

பலவித தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பலரும் இதன் ஊடாக போக்குவரத்து செய்தனர். இவர்கள் போக்குவரத்து செய்கின்ற போது அவர்கள் குறித்த நேரத்திற்கு உரிய இடங்களுக்கு செல்ல முடியாது காரணம் அவர்களது நேரத்திற்கு படகு பயணிக்காது இதனால் பயணித்த மக்கள் தங்கள் நேரங்களில் அதிகமானவற்றை வாவிக்கரை ஓரங்களில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


வைத்தியசாலைக்கு ஒரு நோயாளியை உரிய நேரத்துக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது இதனால் இடையில் இறந்தவர்களும் உண்டு.

இரவு நேரங்களில் குறித்த ஒரு நேரத்திற்கு பிறகு பயணம் செய்ய முடியாது. காரணம் போக்குவரத்து மூடப்பட்டுவிடும். இதனால் வேறு மாவட்டங்களுக்கு நேரம் சென்று கூலி வேலை செய்து விட்டு வந்தவர்கள் பலர் போக்குவரத்து மூடப்பட்டதால் வாவிக்கரையில் நித்திரை செய்து பின்னர் காலையில் எழுந்து பயணித்து சென்ற நினைவுகளும் உள்ளது.

படகில் பயணிக்கும் போது படகு எஞ்சின் பழுதடைந்து படகு காற்றினால் வேறு திசைகளுக்கு இழுத்து செல்லப்பட்டு படகு கரை ஒதுங்கையமை, நடு ஆற்றில் நின்று படகு சுற்றியமை போன்ற நினைவுகள் மறக்க முடியாதவை.

வெள்ளம் ஏற்பட்டால் போக்குவரத்து தடை அதுபோல பலத்த காற்று வீசினால் போக்குவரத்து தடை என பல தடைகளை எதிர் கொள்ள நேரிட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், மாணவர்களும் பொது மக்களும்.

நெல் ஏற்றிச் சென்ற வாகனங்களும் வாவிக்கரையில் விழுந்த நினைவுகளும் உள்ளது.

பல ஊர் கதைகளும் தெரியா விடங்களை அறிந்து கொள்கின்ற இடமகாவும் குறிப்பாக சமூக ஒருங்கிணைப்பை பேணுகின்ற இரு இடமாகவும் இது இருந்தது காரணம் பயணத்திற்காக வாவிக்கரை ஓரத்தில்  அரை மணித்தியாலத்திற்கு மேல் நிற்க வேண்டிய சூழல்.
நெடுநாள் கண்டவர்களையும் இப்போக்குவரத்தில் சந்தித்த, உரையாடிய வரலாறுகளும் உள்ளது.

இவ்வாவி போக்குவரத்தின் போது வாவியிலே தவறி விழுந்து உயிர் தப்பியவர்களும் உள்ளனர் அதுபோல மரணித்தவர்களும் உள்ளனர்.

01.நல்லதம்பி தில்லையம்மா(முனைக்காடு)
                            காவு கொள்ளப்பட்ட நாள் - 12.09.1973
02.சாமித்தம்பி சின்னப்பிள்ளை (முனைக்காடு)
                            காவு கொள்ளப்பட்ட நாள் - 12.09.1973
03.சமித்தம்பி தருமரசா (முனைக்காடு)
                           காவு கொள்ளப்பட்ட நாள் - 12.09.1973
04.நல்லதம்பி சின்னத்துரை(எழுதுவினைஞர்-மகிழடித்தீவு)
                           காவு கொள்ளப்பட்ட நாள் - 26.12.1985
05.கனகசபை ஜயதரன்(உதவி அரசங்க அதிபர்-பட்டிப்பளை) 

                           காவு கொள்ளப்பட்ட நாள் - 17.01.1992
06.மாணிக்கப்போடி கங்கேஸ்வரி(ஆசிரியை முனைக்கடு) 

                           காவு கொள்ளப்பட்ட நாள் - 17.01.1992
07.கதிர்கமப்பொடி ஆறுமுகம்(பட்டிப்பளை)

                           காவு கொள்ளப்பட்ட நாள் - 17.01.1992
08.செல்லத்தம்பி தங்கரச(அரசடித்தீவு)

                           காவு கொள்ளப்பட்ட நாள் - 17.01.1992
09.குமரசிங்கம் வள்ளியமை(கொக்கட்டிசோலை)

                           காவு கொள்ளப்பட்ட நாள் - 24.05.1992
10.வெலுப்பிள்ளை சந்திரகுமர்(முதலைக்குடா)

                           காவு கொள்ளப்பட்ட நாள் - 24.05.1992
11.பலிப்போடி கெதரஜ்(கொக்கட்டிசோலை)

                          காவு கொள்ளப்பட்ட நாள் - 24.05.1992
12.குமரசிங்கம் கமலா(கொக்கட்டிசோலை)

                          காவு கொள்ளப்பட்ட நாள் - 24.05.1992
13.வைரமுத்டு அரன்கனதன்(கொக்கட்டிசோலை)

                          காவு கொள்ளப்பட்ட நாள் - 24.05.1992
14.விஜயலிங்கம் சுகந்தினி(கொக்கட்டிசோலை)

                          காவு கொள்ளப்பட்ட நாள் - 24.05.1992
15.விஜயலிங்கம் ஜெயந்தினி(கொக்கட்டிசோலை)

                          காவு கொள்ளப்பட்ட நாள் ௨4.05.1992
பலத்த உயிர்களை பலிகொண்ட இவ் வாவியின் பசிக்கு இனி எந்த உயிரும் இரையாகப்போவதில்லை.


இவ்வாறு பல நினைவுகளை தந்த மண்முனை வாவி போக்குவரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளியாக மண்முனை பாலம் அமைத்து இன்று 04.00 மணிக்கு திறந்து விடப்படுவதை இட்டு மனமகிழ்ந்து உளம் கனிந்த நன்றிகளை தெரிவிக்கின்றனர் படுவான்கரை மக்கள்.