செங்கலடியில் சித்திரை புத்தாண்டு விழா

செங்கலடி அக்னி இசைக்குழுவின் 14வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டும் சித்திரைப் புத்தாண்டினைக் சிறப்பிக்கும் முகமாகவும் யுனைட்டட் விளையாட்டுக் கழகத்தினருடன் இணைந்து நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.

அக்னி இசைக்குழுத் தலைவர்  எஸ்.ரகு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், செல்லம் பிறிமியர் உரிமையாளர் க.மோகன் மத தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிறிக்கெட் சுற்றுப்போட்டி, ஆண்பெண் இருபாலருக்குமான கயிறு இழுத்தல், பெண்களுக்கான மட்டை இழைத்தல், தேங்காய் திருவுதல், தொப்பி மாற்றுதல், சிறுவர்களுக்கான சாக்கு ஓட்டம், எலி ஓட்டம், மிட்டாய் ஓட்டம், பெரியவர்களுக்கான மாவுக்குள் காசு எடுத்தல், குழிர்பானம் அருந்துதல், ஆண்களுக்கான முட்டி உடைத்தல் போன்ற நிகழ்சிகள் நடைபெற்றதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் போது கலைத்துறை ஹபாயின், கிட்டார் வாத்திய கலைஞர் க.சடாச்சரம், தாளவாத்தியம் பாடகர், அறிவிப்பாளர் அ.நேசதுரை, பாடகர் அறிவிப்பாளர் எஸ்.பிரபாகரன், வாத்தியத்துறை ஒக்டோபட் எஸ்.ஜெயானந் கலைத்துறை பாடகி வி.வசந்தகுமாரி ஆகியோர் விருதுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.