கிழக்கு பல்கலைக்கழத்தில் நாளை திறக்கப்படவிருக்கும் கட்டடத்தொகுதிகள்

(சித்தாண்டி நித்தி) வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் 555 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட நூழைவாயில் மற்றும் நான்கு பாரிய கட்டடத்தொகுதிகளை நாளை (19.04.2014) கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா  தலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திறக்கவுள்ள நிலையில் அனைத்து வேலைகளும் நிறைவடைந்து தயார்நிலையில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுக்கு உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

இந்த அபிவிருத்தித்திட்டங்களில் 7 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட புதிய நுழைவாயில், 230 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட வர்த்தக முகாமைத்துவ பீட கட்டடத் தொகுதி, 121 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட கலை கலாசார பீட கட்டடத் தொகுதி, 171 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பிரதான நூலக கட்டடத் தொகுதி, 25 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கு என்பன அடங்குகின்றன.