கல்லடியில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு

மட்­டக்­க­ளப்பு காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கல்­லடி,நாவற்­குடா பிர­தே­சத்தில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்­கிய நிலையில் பெண்­னொ­வ­ரு­வரின் சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது.
நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை முற்­பகல் கல்­லடி,இசை நட­னக்­கல்­லூரி வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே 25 வய­து­டைய இளம் தாய் ஒரு­வரின் சடலம் இவ்­வாறு மீட்­கப்­பட்­டுள்­ளது. குறித்த பெண் தூக்கில் தொங்­கிய நிலையில் காணப்பட்டபோ­திலும் கால்கள் நிலத்தில் பட்டவாறு காணப்பட்டதால் இந்த மரணம் தொடர்பில் உற­வி­னர்கள் சந்­தேகம் வெளி யிட்­டுள்­ளனர்.
குறித்த வீட்­டுக்கு சென்ற பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­துடன் நீதி­வானின் உத்­த­ர­வுக்­க­மைய சட­லத்­தினை பிரேத பரி­சோ­த­னை­க­ளுக்­காக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு கொண்­டு­சென்­றுள்­ளனர்.
ஒரு குழந்­தையின் தாயான இவர் காரை­தீ­வினை சேர்ந்­தவர் எனவும் கண­வனை பிரிந்து வாழ்ந்­து­வ­ரு­வ­தா­கவும் மறு­மணம் செய்­யவும் உத்­தே­சித்­தி­ருந்­த­தா­கவும் உற­வி­னர்கள் தெரிவித்­தனர்.
எனினும் இந்தச் சம்­பவம் தொடர்பில் சந்­தேகம் உள்­ளதால் இது தொடர்பில் பூரண விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பிலான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.