துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் பாடசாலை மேம்பாட்டுத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு (28.07.2014)

(பிறின்ஸ்) வலயக்கல்விப்பணிப்பாளர்   திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களின் திட்டமிடலுக்கமைய ஆசிரிய  வளநிலைய பொறுப்பாளர் அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டு கோட்டக் கல்விப்பணிப்பாளர், துறைநீலாவணை பாடசாலை அதிபர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட துறைநீலாவணை  பாடசாலை ஆசிரியர்கள் பிரசன்னத்தில் இன்று (28.07.2014) இடம் பெற்றது. இதில் PSI , SBTD, Catchment Area Map சம்மந்தமான பூரண தெளிவுபடுத்தலும் இடம்பெற்றது.  இதற்கான அனுசரணையை UNICEF வழங்கியிருந்தது.

இந்நிகழ்வில் உரையாற்றிய வலய கல்விப்பணிப்பாளர் அனைத்து பிள்ளைகளும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்றும் மாணவர்களின் உண்மையான தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில் ஆசிரியர்கள் தங்கள் வாண்மையை மேம்படுத்த வேண்டும் எனவும் மாறி வரும் நவீன உலகிற்கேற்ப ஆசிரியர்கள் திறமையினை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். கோட்டக் கல்விப்பணிப்பாளரும் தம் உரையில் இதனை உறுதிப்படுத்தினார். இறுதியாக பாடசாலை அதிபர் திரு T .ஈஸ்வரன் அவர்கள்  வலயக்கல்விப்பணிப்பாளர், கோட்டக்கல்விப்பணிப்பாளர், ஆசிரியர் வள நிலைய முகாமையாளர் மற்றும் அனைவருக்கும் நன்றியினை தெரிவிக்க இனிதே இவ்வமர்வு நிறைவு பெற்றது.