தொடையில் பாய்ந்த அலவாங்கு


(சக்தி)
அறுவடை செய்யும் மெசினிலிருந்து  கீழே இறங்கி ஒருவருக்கு தொடைப் பகுதியில் அலவாங்கு ஏறிய சம்மபவம் ஒன்று  வெல்லாவெளியில் வயல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பெற்றி மேலும் தெரிவருவதாவது….

வேளாண்மை அறுவடை செய்யும் மெசினில் உதவியாளராக கடமைபுரியும் குறித்த நபர் அறுவடை செய்துவிட்டு மெசின் தரித்து நிற்கும்போது மெசினின் மேலிருந்து கீழே பாய்ந்து இறங்கியுள்ளார். அப்போது வயலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலவாங்கு இவரின் தொடைப்பகுதியில் ஏறியுள்ளது.



இச்சம்பவத்தில் அம்பாறை மாவட்டம், மத்திமுகாம் 11 ஆம் கொலனி சேர்ந்த சோமசுந்தரம்-ரநந்தன் என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு அலவாங்கு ஏறியதை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணனுக்கு அருகிலிருந்த விவசாயிகள் தெரியப்படுத்தியதை அடுத்து. அவ்விடத்திற்கு வைத்தியசாலையிருந்து அப்பியுலான்ஸ் வண்டியினை அனுப்பி நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டு வந்த பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் கூறினார்

குறித்த நபரின் தெடடைப் பகுதிலிருந்து நெஞ்சுப் பகுதிவரை சுமார் ஒன்றரை தொடக்கம் இரண்டு அடிவரை அலவாங்கு ஏறியுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார்.

தற்போது பாதிக்கப்பட்டவருக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கபட்டு வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.