கரையோர வலய மீளமைப்புத்திட்டத்தின் கீழ் கரையோரங்களையும்,சுற்றுச்சூழலையும் பாதுகாத்தல் மீழாய்வுக்கூட்டம்

(வாழைச்சேனை-ரவிக்குமார்) கரையோர வலய மீளமைப்புத்திட்டத்தில் கரையோரங்களையும்,சுற்றுச் சூழலையும் பாதுகாகும்; செயற்திட்டமானது பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சின்; கீழ் இயங்கும் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பங்குபற்றலுடன் கூடிய நிலையான கரையோர வலய மீழாய்வுக்கூட்டமானது கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது.
கரையோர வலய மீளமைப்புத் திட்டத்தின் கீழ் கரையோரங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்தல் மீழாய்வுக் கூட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட, நடைமுறைப்படுத்தப்படும் பின்வரும் திட்டங்களின் முன்னேற்றங்கள், திட்டமிடல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

கரையோரங்களை பாதுகாக்கும் வகையில் கரையோர மக்களுக்காக சுமார் 27 இலட்சம் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படும் மலசலகூடம் அமைத்தல், கண்டல் தாவரங்களை பாதுகாக்கும் வகையில் 56 இலட்சம் ருபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிக,நிரந்தர எல்லையிடல் திட்டம் மற்றும் சுமார் 60 இலட்சம் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட வனவள பாதுகாப்பு எல்லையிடல் போன்ற திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இந்நிகள்வில் விசேடமுகாமைத்துவ திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வுகள், ஏணைய அமைப்புகளுக்கான விழிப்புணர்வுகள், வாழ்வாதார திட்டங்களுக்கான செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.வே.நவிரதன் அவர்களும், மாவட்டதிட்டமிடல் பணிப்பாளர்  திரு.எ.கோகுலதீபன் அவர்களும், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களான திரு.ஜீ.விஜயதர்சன், திரு.கே.ரூபன் அவர்களும்;, ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.