கர்நாடக சங்கீத வினாவிடைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

 (சக்தி)
மட்டக்களப்பு தேற்றத்தீவு தங்கராசா - வாகீசன் ஆசிரியர் அவர்களினால் எழுதப்பட்ட கர்நாடக சங்கீத வினாவிடைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் நேற்று வியாக் கிழமை (24) நடை பெற்றது.

தேனுகா கலைக் கழகத்தலைவர் த.விமலானந்தராஜா தலைமையில் நடை பெற்ற இந் நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் மு. விமலநாதன் உதவிக் கல்விப் பணிப்பாளர்(அழகியற் கல்வி) க.சுந்தரலிங்கம் மற்றும் பெரியகல்லாறு மத்திய கல்லூரி அதிபர் க.நல்லதம்பி, சங்கீத சேவைக்கால பயிற்சி ஆலோசகர் திருமதி. டே.இராஜகுமாரன் ஆகியேர் உட்பட கிராம பெரியோர்கள், ஆசியரியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் போது நூல் பற்றிய அறிமுக உரையை சேவைக்கால பயிற்சி ஆலோசர் திருமதி. டே.இராஜகுமாரன் அவர்கள் ஆற்றினார், நூலின் முதற்பிரதியினை நூலாசிரியரிடம் இருந்து பிரதிக் கல்விப் பணிப்பாளர் மு. விமலநாதன் பெற்றுக் கொண்டார். சிறப்பு பிரதிகளை இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் பொற்றுக் கொண்டனர்.

இந் நூலனாது உயர்தரத்தில்  சங்கீதப்படம் கற்கும்; மாணவர்களுக்கு உகந்ததாக அமைக்கப் பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்தரப் பீட்சைக்கு தேற்றவிருக்கும் மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் உருவாக்கப்பட்டு வெளியீட்டு வைக்கப் பட்டுள்ள முதலாவது நூல் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.