வவுணதீவு விபுலானந்தா விளையாட்டுக் கழகத்தின் கௌரவிப்பு நிகழ்வும் மின்னொளி கரப்பந்தாட்ட விளையாட்டும்

(.லோகதக்சன்& சதீஸ்)
மட்டக்களப்பு வவுணதீவு விபுலானந்தா விளையாட்டுக் கழகத்தின் 28வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மின்னொலி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி மற்றும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு சனிக்கிழமை 19ம் திகதி இரவு இடம்பெற்றது.

கழக தலைவர் .ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞா.ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் .சோமசுந்தரம், மட்டக்களப்பு மேற்கு உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரகுமார், வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலய அதிபர் மா.யோகேந்திரன், வவுணதீவு பிரதேச சம்மேளனத் தலைவர் செ.அழகரெத்தினம்ஊர் பிரமுகர்கள், கழக உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்கள் மற்றும் மாகாண மட்டத்தில் நடைபெற்ற தட்டெறிதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கும் பரிசில்கள் மற்றும் நினைவுச் சின்னம் என்பன கலந்து கொண்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் வவுணதீவுப் பிரதேசத்தில் இயங்கும் பாலர் பாடசாலையில் எவ்வித ஊதியமும் இன்றி கடமையாற்றும் ஆசிரியர் இருவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பொன்.செல்வராசா ஆகியோரால் நினைவுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


அத்தோடு மின்னொலி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் முதலாவது சுற்றுப் போட்டியானது கலந்து கொண்ட அதிதிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப் போட்டியில் 20 விளையாட்டு அணிகள் கலந்துகொண்டன. இதில் சம்பூர் ஸ்ரீ கணேசா அணி முதலாம் இடத்தினையும், மங்கிகட்டு கதிரவன் விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தினையும் மற்றும் மூதூர் ஸ்ரீமலர் கழகம் மூண்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

வெற்றி பெற்ற விளையாட்டு அணியினருக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.