உள்ளுராட்சி மன்ற நடவடிக்கைகளில் மக்கள் பங்களிப்பு பயிற்சிப்பட்டறை!

(சுழற்சி நிருபர்)
உள்ளுராட்சி மன்ற நடவடிக்கைகளில் மக்களின் பங்கேற்பையும் பங்குபற்றுதலையும் வலியுறுத்தும் வண்ணம் விழிப்புணர்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக குச்சவெளிப் பிரதேச சபையின் சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தரும் வளவியலாளருமான வசந்தி ஜெயராஜா தெரிவித்தார்.

இப்பயிற்சி நெறி 25.07.2014 திருகோணமலை மாவட்ட சர்வோதய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள்இ உள்ளுராட்சி மன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்இ மற்றும் சர்வோதய பங்காளர்கள் உள்ளிட்ட 24 பங்கு பற்றுநர்கள் இந்த பயிற்சி நெறியில் கலந்து கொண்டார்கள்.

உள்ளுராட்சியின் விஷேடத்துவம்இ பங்கேற்பின் அவசியம்இ சட்டமும் ஒழுங்கும்இ வினைத்திறனும் விளைதிறனும்இ வெளிப்படைத்தன்மைஇ பொறுப்புக் கூறல்இ சமத்துவம் அனைவரையும் உள்வாங்கும் தன்மைஇ மக்கள் பங்கேற்பிற்கான தடைகள் போன்ற விடயதானங்களில் பயிற்சிகள் இடம்பெற்று வருவதாக சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தரும் வளவியலாளருமான வசந்தி ஜெயராஜா மேலும் தெரிவித்ததார்.
அபிவிருத்தித் திட்டங்களில் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகள் தொடர்பாக ஏற்படும் வன்முறைகளுக்கு சுமுகத் தீர்வு கண்டு வன்முறைகளைக் குறைப்பதற்கு ஏற்ற வகையிலமைந்த பெண்கள் விழி;ப்புக் குழு பற்றிய விடயமும் பயிற்சி நெறியில் விஷேடமாக உள்வாங்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.