யானைகளை பொதுமக்களிடமிருந்து பாதுகாக்குமாறு கோர வேண்டிய நிலை ஏற்படும்! அரியநேத்திரன் எம்.பி.

யானை­களை பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து பாது­காப்­ப­தற்கு காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு அர­சையும் அரச அதி­கா­ரி­க­ளையும் கோர வேண்­டிய நிலைக்கு இம்­மா­வட்ட மக்கள் தள்­ளப்­பட்­டுள்­ளனர். கடந்த வெள்­ளிக்­கி­ழமை பலாச்­சோலை கிரா­மத்தில் யானையின் தாக்­கு­த­லுக்கு இலக்­காகி மர­ண­மான க.நட­ராசா என்­ப­வரின் இறப்பு எடுத்துக் கூறு­கின்­றது என மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பா.அரி­ய­நேத்­திரன் விடுத்­துள்ள அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார். அந்த அறிக்­கையில் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது,

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கடந்த நான்கு வரு­டங்­க­ளாக யானை­களின் தாக்­கு­த­லுக்கு இலக்­காகி இம்­மா­வட்ட மக்கள் அநி­யா­ய­மாக பலி­யாகி வரு­கின்­றனர். இது­வரை சுமார் 35பேருக்கு இக்­கதி நேர்ந்­துள்­ள­துடன் சுமார் 300 வீடு­களும் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. இனப்­பி­ரச்­சினை போன்று இந்தப் பிரச்­சி­னைக்கும் நிரந்­தர தீர்வு காணு­மாறு நாம் மாவட்ட அபி­வி­ருத்தி குழு கூட்டம் தொடக்கம் பாரா­ளு­மன்றம் வரை கோரிக்­கை­களை முன் வைத்­துள்ளோம். இறு­தியில் அண்­மையில் மாவட்ட செய­ல­கத்தில் நடை­பெற்ற விசேட கூட்­டத்­திலும் சுட்­டிக்­காட்­டினோம். மக்களைக்கொண்டு ஆர்ப்பாட்டமும் செய்தோம் இதற்கு அமைய இரண்டு அலு­வ­ல­கங்கள் மட்­டுமே பெய­ர­ளவில் திறக்­கப்­பட்­டுள்­ளன. தவிர இந்தக் கூட்­டத்­துக்கு முன்­னரும் பின்­னரும் தெரி­விக்­கப்­பட்ட எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அமைச்சர் மட்டக்களப்பிற்கு வருகைதந்தும் வெறும் வீக்குறுதிகள் வழங்கப்பட்டும் ஆக்கபூர்வமான எதுவுமே நடைபெறவில்லை அர­சாங்க அதி­ப­ரினால் விடுக்­கப்­படும் அறி­வு­றுத்­தல்­க­ளையும் வன ஜீவ­ரா­சிகள் திணைக்­களம் புறக்­க­ணிப்­பது என்ற குற்­றச்­சாட்டும் எழுந்­துள்­ளது.

திறக்­கப்­பட்­டுள்ள இரு அலு­வ­ல­கங்­க­ளுக்கும் அடிப்­படைத் தேவை­யான வாகன வசதி கூட செய்து கொடுக்­கப்­ப­ட­வில்லை. யானை­களின் அனர்த்தம் அதி­க­ரித்­துள்ள பகுதி மக்கள் ஏற்­க­னவே இடம்­பெ­யர தயா­ரா­னார்கள். அத­னையும் மேற்­படி திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்கள் தடுத்து விட்­டனர். யானைகளைத் துரத்துவதற்கு செல்லும் உத்­தி­யோ­கத்­தர்கள் பொது மக்­க­ளையும் தம்­முடன் அழைத்துச் சென்று பக­டைக்­கா­யாக பயன்­ப­டுத்­து­கின்­றனர். அவர்கள் வேண்டா வெறுப்­பாக நடந்து கொள்­வ­துடன் இது யானை நட­மாடும் காடு­தானே என்றும் பொது­மக்­க­ளிடம் தெரி­விக்­கின்­றனர்.

சம்­பவ தினம் உரிய உத்­தி­யோ­கத்­தர்கள் தகவல் கிடைத்­த­வு­டனே சென்­றி­ருந்தால் ஏற்­பட்ட அனர்த்­தத்தை தவிர்த்­தி­ருக்­கலாம். எனவே இனிமேல் யானை­களை பொது­மக்­க­ளிடம் இருந்து காப்­பாற்­று­மாறு கோர வேண்­டிய நிலையை ஏற்­பட்­டும்போதுதான் சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டிய நிலை ஏற்படும் இதனை நாம் விரும்­ப­வில்லை. பொது­மக்­களை அதுவும் மீள் குடி­யேற்­றப்­பட்ட மக்­களைப் பாது­காக்க வேண்­டிய பொறுப்பு அர­சி­ன­ருக்­கு­ரி­ய­தாகும். இதற்கு ஆவன செய்ய வேண்டும். திறக்­கப்­பட்­டுள்ள இரண்டு அலுவலகங்களுக்கும் தேவையான வாகனம் ஆளணி மற்றும் வசதிகளை உடனடியாக வழங்க வேண்டும். அமைச்சரினால் கூட்டப்பட்ட விசேட கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை உடனடியாக அமுல்படுத்த வேண்டும். யானை நுழைவதை தடுப்பதற்கான மின்சார வேலிகளை உடனடியாக அமைக்க வேண்டும். தொடர்ந்து ம் யானையால்
மக்கள் இறப்பார்களானால் அதனால்
மக்கள் சுயமாக திரண்டு பாரிய போராட்டம் நடத்துவது தவிர்கமுடியாது.
எனவும் அரியம் எம்.பி மேலும் தெரிவித்தார்.