அமைச்சர் ரவூப் ஹக்கீம் அட்டாளைச்சேனையில் ஆற்றிய உரை.

இலங்கை என்பது ஒரு ஜனநாயக நாடு. இது சர்வதேசத்திலிருந்து தனிமைப் படுத்தப்பட்டு எல்லாவற்றையும் நாட்டின் சுயாதிபத்தியத்தினோடும் இறைமையோடும் முடிச்சுப் போட்டு முடிவு கட்டி விடலாம் என்று சிலர் எதிர்பார்ப்பது முட்டாள்தனமான விடயமாகும் என நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அனுசரணையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வும் விஷேட துஆப் பிரார்த்தனையும் சனிக்கிழமை(26) அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம பங்கேற்பாளராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரை நிகழ்த்துகையில், எமது நாட்டின் உள்ளுர் அரசியல் ஒருபுறமிருக்க சர்வதேச ரீதியில் இந்த நாட்டுக்கு பலவிதமான நெருக்குதல்கள் வந்து கொண்டிருந்த போது அதை சண்டித் தனமாக சமாளித்துக் கொள்ளலாம் என்ற முயற்சியும் பேச்சும் தற்போது சற்று சம்பந்தப்பட்டவர்களால் தளர்த்தப்பட்டிருக்கின்றது. சர்வதேச ரீதியான சவால்களை சற்று அனுசரித்துப் போக வேண்டும் என்ற நிலைப்பாடு தற்போது ஆட்சியாளர்கள் மீது வந்துள்ளது.
தேசிய அரசியலின் சமன்பாடுகளிலே இருக்கும் ஏற்றத் தாழ்வுகள் ஓரளவு சமநிலைப் படுகின்றபோதுதான் சில பேரம் பேசும் சக்திகளுக்கு அது பலத்தைச் சேர்க்கும். அவ்வாறான அரசியல் சமன்பாடு தேசிய அரசியலில் ஏற்படுவதற்கு ஒரு சமூகத்தில் மாத்திரம் உள்ள ஒற்றுமைக்கும் அப்பால் எதிர்த்தரப்பு அரசியல்  செய்கின்றவர்களுக்கும் மத்தியில் ஓர் ஒற்றுமையான நிலைப்பாட்டைத் தோற்றுவிக்க வேண்டும் என்பதற்கு ஏதுவாகப் போடப்பட்ட பிள்ளையார் சுழியாக எதிர்த்தரப்பின் ஒற்றுமையை நாங்கள் பார்க்கலாம். தேர்தலின்போது பொது வேட்பாளர் தெரிவு செய்வது போன்ற பிரச்சினைகள் எவ்வாறு தீர்த்து வைக்கப்படப் போகிறது என தெரியாமல் இருந்தாலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எந்த அணியில் இணைந்து தேர்தல் செய்யும் என்பதை நிதானமாய்ச் சிந்தித்து தக்க தருணத்தில் முடிவு செய்யும்.
அடுத்த கட்ட அரசியலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இயக்கம் இலங்கையில் எந்தக் கட்சியும் சந்தித்திராத பாரிய சவால்களைச் சந்திக்கவுள்ளது. எமது கட்சிக்கிருக்கும் பேரம் பேசும் சக்தியினை இழந்து விட்டோம், தேசிய அரசியலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினை கூடவே வைத்துக் கொண்டு குழிபறிக்கும் தரப்பினர் மீது எம்மவர்கள் விரக்தி மனப்பான்மையோடு பார்த்தாலும் எமது அரசியலுக்கான சரியான பதிலை சொல்வதற்கும் தீர்மானிப்பதற்குமான காலம் தற்போது கனிந்து வருகின்றது.

எதிர்வரும் ஆறு மாத காலப் பகுதிக்குள் இலங்கையில் நாடு தழுவிய தேர்தல் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. அரசியலில் ஆறு மாதங்கள் என்பது நீண்ட காலப்பகுதியாகும். இக்காலப் பகுதியில் பல்வேறான விடயங்கள் கட்சிகளுக்குள் நிகழலாம். அத்தiனை விடயங்களையும் நிதானமாய்ப் பார்த்துவிட்டு எமது சமூகத்தின் நிம்மதிக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்க்கமான முடிவினை எடுக்கவுள்ளது.
முஸ்லிம் சமூகத்திற்கெதிராக சமய ரீதியான தீவிர வாதம் காவியுடை தரித்து வேண்டுமென்றே வன்முறைகள் புரிந்த போது அதைத் தடுப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகளை இந்த ஆட்சியாளர்கள் செய்யவில்லை என்பதை முஸ்லிம்கள் மாத்திரமல்ல இந்த நாட்டிலுள்ள ஏனைய இனத்தவர்களும் நடுநிலைமையில் இருந்து சிந்திக்கும் தரப்பிலிருந்தும் சொல்லப்பட்டது. எமது சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை நாம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு எடுத்துச் சொன்னோம். இதனால் நாம் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளாகப் பார்க்கப்பட்டோம். ஆனால் அச்சமில்லாமல் ஆட்சியில் இருந்து கொண்டு அந்த சவால்களை சமாளிக்கும் சக்தியும் துணிவும் எமக்கிருக்கின்றது.
அமெரிக்க, ஐரோப்பிய, பிரித்தானியத்  தூதுவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரைச் சந்தித்தால் வேண்டுமென்றே பழி சொல்லப்படுகின்றது. இச்சம்பவத்தால் முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுகின்ற தீவிரமான அரசியல் தலைமைகள் அரசாங்கத்தின் தயவிலோ அல்லது அதன் தயவில்லாமலோ எமக்கெதிராகவும் கட்சிக்கெதிராகவும் பல்வேறான விமர்சனங்கள் எழுந்த வண்ணமுள்ளன.
அளுத்கம பேருவளை போன்ற பகுதிகளில் நடந்த அசம்பாவிதங்களுக்கு நீங்கள்தான் காரணமாக அமைந்தீர்கள் என சில அரசியல் தலைமைகள் சொன்னதைப்  போல்தான் இப்போது பல நூற்றுக் கணக்கான பலஸ்தீன உயிர்களை வேண்டுமென்றே சூறையாடிய இஸ்ரேலுக்கு அமெரிக்கா சாமரம் வீசுகின்றது. எமது முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை நாம் அண்மையில் சவூதி அரேபியாவுக்குச் சென்றபோது 56 முஸ்லிம் நாடுகளை ஒன்றிணைத்துக் கொண்டியங்கும் இஸ்லாமி நாடுகளின் ஒன்றியத்திடம் எடுத்துச் சொல்லியிருக்கின்றோம். அதனடிப்படையில் அதன் பிரதிநிதிகள் எமது நாட்டிற்கு வருகை தரவள்ளார்கள்.
அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்குள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இக்கட்சியினுடைய அனைத்து செயற்பாட்டாளர்களையும் ஒன்றிணைத்து தற்கால கள நிலவரங்களை ஆராய்ந்துடன் கடந்த காலங்களில் ஆட்சியாளர்களால் கட்சிக்குத் தரப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டது சம்பந்தமாகவும், கூடவே வைத்துக் கொண்டு வேண்டுமென்றே குழி பறிக்கும் செயற்பாடுகள் போன்றவற்றை மிகத் தெளிவாக மீளாய்வு செய்து சமூகத்தின் உள்ளக் கிடக்கைகளுக்கு மாற்றமில்லாத சரியான முடிவெடுத்து இயங்கவுள்ளது என்றார்.இலங்கை என்பது ஒரு ஜனநாயக நாடு. இது சர்வதேசத்திலிருந்து தனிமைப் படுத்தப்பட்டு எல்லாவற்றையும் நாட்டின் சுயாதிபத்தியத்தினோடும் இறைமையோடும் முடிச்சுப் போட்டு முடிவு கட்டி விடலாம் என்று சிலர் எதிர்பார்ப்பது முட்டாள்தனமான விடயமாகும் என நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அனுசரணையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வும் விஷேட துஆப் பிரார்த்தனையும் சனிக்கிழமை(26) அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம பங்கேற்பாளராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரை நிகழ்த்துகையில், எமது நாட்டின் உள்ளுர் அரசியல் ஒருபுறமிருக்க சர்வதேச ரீதியில் இந்த நாட்டுக்கு பலவிதமான நெருக்குதல்கள் வந்து கொண்டிருந்த போது அதை சண்டித் தனமாக சமாளித்துக் கொள்ளலாம் என்ற முயற்சியும் பேச்சும் தற்போது சற்று சம்பந்தப்பட்டவர்களால் தளர்த்தப்பட்டிருக்கின்றது. சர்வதேச ரீதியான சவால்களை சற்று அனுசரித்துப் போக வேண்டும் என்ற நிலைப்பாடு தற்போது ஆட்சியாளர்கள் மீது வந்துள்ளது.
தேசிய அரசியலின் சமன்பாடுகளிலே இருக்கும் ஏற்றத் தாழ்வுகள் ஓரளவு சமநிலைப் படுகின்றபோதுதான் சில பேரம் பேசும் சக்திகளுக்கு அது பலத்தைச் சேர்க்கும். அவ்வாறான அரசியல் சமன்பாடு தேசிய அரசியலில் ஏற்படுவதற்கு ஒரு சமூகத்தில் மாத்திரம் உள்ள ஒற்றுமைக்கும் அப்பால் எதிர்த்தரப்பு அரசியல்  செய்கின்றவர்களுக்கும் மத்தியில் ஓர் ஒற்றுமையான நிலைப்பாட்டைத் தோற்றுவிக்க வேண்டும் என்பதற்கு ஏதுவாகப் போடப்பட்ட பிள்ளையார் சுழியாக எதிர்த்தரப்பின் ஒற்றுமையை நாங்கள் பார்க்கலாம். தேர்தலின்போது பொது வேட்பாளர் தெரிவு செய்வது போன்ற பிரச்சினைகள் எவ்வாறு தீர்த்து வைக்கப்படப் போகிறது என தெரியாமல் இருந்தாலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எந்த அணியில் இணைந்து தேர்தல் செய்யும் என்பதை நிதானமாய்ச் சிந்தித்து தக்க தருணத்தில் முடிவு செய்யும்.
அடுத்த கட்ட அரசியலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இயக்கம் இலங்கையில் எந்தக் கட்சியும் சந்தித்திராத பாரிய சவால்களைச் சந்திக்கவுள்ளது. எமது கட்சிக்கிருக்கும் பேரம் பேசும் சக்தியினை இழந்து விட்டோம், தேசிய அரசியலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினை கூடவே வைத்துக் கொண்டு குழிபறிக்கும் தரப்பினர் மீது எம்மவர்கள் விரக்தி மனப்பான்மையோடு பார்த்தாலும் எமது அரசியலுக்கான சரியான பதிலை சொல்வதற்கும் தீர்மானிப்பதற்குமான காலம் தற்போது கனிந்து வருகின்றது.

எதிர்வரும் ஆறு மாத காலப் பகுதிக்குள் இலங்கையில் நாடு தழுவிய தேர்தல் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. அரசியலில் ஆறு மாதங்கள் என்பது நீண்ட காலப்பகுதியாகும். இக்காலப் பகுதியில் பல்வேறான விடயங்கள் கட்சிகளுக்குள் நிகழலாம். அத்தiனை விடயங்களையும் நிதானமாய்ப் பார்த்துவிட்டு எமது சமூகத்தின் நிம்மதிக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்க்கமான முடிவினை எடுக்கவுள்ளது.
முஸ்லிம் சமூகத்திற்கெதிராக சமய ரீதியான தீவிர வாதம் காவியுடை தரித்து வேண்டுமென்றே வன்முறைகள் புரிந்த போது அதைத் தடுப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகளை இந்த ஆட்சியாளர்கள் செய்யவில்லை என்பதை முஸ்லிம்கள் மாத்திரமல்ல இந்த நாட்டிலுள்ள ஏனைய இனத்தவர்களும் நடுநிலைமையில் இருந்து சிந்திக்கும் தரப்பிலிருந்தும் சொல்லப்பட்டது. எமது சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை நாம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு எடுத்துச் சொன்னோம். இதனால் நாம் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளாகப் பார்க்கப்பட்டோம். ஆனால் அச்சமில்லாமல் ஆட்சியில் இருந்து கொண்டு அந்த சவால்களை சமாளிக்கும் சக்தியும் துணிவும் எமக்கிருக்கின்றது.
அமெரிக்க, ஐரோப்பிய, பிரித்தானியத்  தூதுவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரைச் சந்தித்தால் வேண்டுமென்றே பழி சொல்லப்படுகின்றது. இச்சம்பவத்தால் முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுகின்ற தீவிரமான அரசியல் தலைமைகள் அரசாங்கத்தின் தயவிலோ அல்லது அதன் தயவில்லாமலோ எமக்கெதிராகவும் கட்சிக்கெதிராகவும் பல்வேறான விமர்சனங்கள் எழுந்த வண்ணமுள்ளன.
அளுத்கம பேருவளை போன்ற பகுதிகளில் நடந்த அசம்பாவிதங்களுக்கு நீங்கள்தான் காரணமாக அமைந்தீர்கள் என சில அரசியல் தலைமைகள் சொன்னதைப்  போல்தான் இப்போது பல நூற்றுக் கணக்கான பலஸ்தீன உயிர்களை வேண்டுமென்றே சூறையாடிய இஸ்ரேலுக்கு அமெரிக்கா சாமரம் வீசுகின்றது. எமது முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை நாம் அண்மையில் சவூதி அரேபியாவுக்குச் சென்றபோது 56 முஸ்லிம் நாடுகளை ஒன்றிணைத்துக் கொண்டியங்கும் இஸ்லாமி நாடுகளின் ஒன்றியத்திடம் எடுத்துச் சொல்லியிருக்கின்றோம். அதனடிப்படையில் அதன் பிரதிநிதிகள் எமது நாட்டிற்கு வருகை தரவள்ளார்கள்.
அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்குள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இக்கட்சியினுடைய அனைத்து செயற்பாட்டாளர்களையும் ஒன்றிணைத்து தற்கால கள நிலவரங்களை ஆராய்ந்துடன் கடந்த காலங்களில் ஆட்சியாளர்களால் கட்சிக்குத் தரப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டது சம்பந்தமாகவும், கூடவே வைத்துக் கொண்டு வேண்டுமென்றே குழி பறிக்கும் செயற்பாடுகள் போன்றவற்றை மிகத் தெளிவாக மீளாய்வு செய்து சமூகத்தின் உள்ளக் கிடக்கைகளுக்கு மாற்றமில்லாத சரியான முடிவெடுத்து இயங்கவுள்ளது என்றார்.