ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா பத்து லட்சம் ரூபா வீதம் நூற்றி இருபது லட்சம் ரூபா நிதி பிரதேச செயலக பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது

டில்ஷான்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என்ற திட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் முதலாவது வேலைத்திட்டம் இன்று (24.07.2014) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பன்னி;ரெண்டு கிராம சேவகர் பிரிவிலும் இவ் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா பத்து லட்சம் ரூபா வீதம் பிரதேச செயலக பிரிவிற்கு நூற்றி இருபது லட்சம் ரூபா பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்கான ஆரம்ப நிகழ்வு பேத்தாளை கிராம சேவகர் பிரிவில் பேத்தாளை முருகள் கோவில் வீதி கொங்ரீட் இடும் வேலைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் ஆரம்ப நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் தலைமையில் இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்டச் செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.முரளீதரன், பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், கிராம சேவை உத்தியோகத்தர்,வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.