சூறாவளி, சுனாமி, இடம்பெயர்வுகள் எம்மை இலவசமாக கையேந்துவதர்க்கு பழக்கியுள்ளது : ந.தயாசீலன் கோட்டக்கல்விப் பணிப்பாளர்

(படுவான் பாலகன்) சூறாவளி, சுனாமி, இடம்பெயர்வுகள் எம்மை இலவசமாக கையேந்துவதர்க்கு  பழக்கியுள்ளது  என மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ந.தயாசீலன் அவர்கள் வேள்ட்விஸன் நிறுவனத்தின் அனுசரணையுடன் உக்டா நிறுவனத்தினால் head way நிறுவனத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும்  let's go  ஆங்கிலக்கல்லூரியில் level - I ப+ர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் போது குறிப்பிட்டார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்

எதிர்கால கல்வி நிலைக்கு ஆங்கிலம் மற்றும் கணனி என்பவை மிக முக்கியமானவை அவை இன்றி எந்தவித தொழிலுமே செய்யமுடியாத ஒரு சூழல் எதிர்காலத்தில் உருவாகும் அதற்காக நாம் அதனை இன்று இருந்தே ஒவ்வொரு குழந்தைகளையும் கற்பிக்க வேண்டிய அவசியமும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டிய தேவையும் பெற்றோர்கள் ஒவ்வொருவருக்கும்  உள்ளது. இன்று வெளியாகின்ற அனைத்து கண்டுபிடிப்புக்களும் முதலில் ஆங்கிலத்திலே வெளியாகின்றது இதிலிருந்து ஆங்கிலம் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக எமது பிரதேசத்து மக்கள் இலவசமாக எதையும் வழங்கியினால் அதை பெறுவதில்  ஆர்வமாக உள்ளார்கள். இதனை சூறாவளி, சுனாமி, இடம்பெயர்வுகள் எம்மை இலவசமாக கையேந்துவதர்க்கு  பழக்கியுள்ளது என்றுகூட கூறமுடியும். பொருளாதாரமாக இருந்தாலும் சரி நல்ல பழக்க வழக்கங்களாக இருந்தாலும் சரி கல்வியினாலேயே அனைத்தையும் கட்டியெழுப்ப முடியும். எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வு இன்று(25) வெள்ளிக்கிழமை முனைக்காடு உக்டா சமூகவளநிலையத்தில்; நிறுவனத்தின் தலைவர் திரு.இ.குகநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெறற்றது. இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், வேள்ட்விஸன் நிறுவன திட்ட இணைப்பாளர் திரு.ந.சபேசன், மட் முனைக்காடு விவேகானந்த வித்தியாலய அதிபர் திரு.பொ.நேசதுரை, உக்டா நிறுவன பொருளாளர் திரு.மு.அருட்செல்வம், செயலாளர் திரு.சி.கங்காதரன், உபதலைவர் கமலபாதம், உபசெயலாளர் ஆ.தனுஸ்கரன் ஆங்கிலக்கல்லூரி இணைப்பாளர், ஆசிரியர், திட்ட ஊக்குப்பாளர்கள், பாலர்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது பிரிவு I  ப+ர்த்தி செய்த 13 மாணவர்களுக்கு இச்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.