சட்டவிரோத பாலைமரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டன ! சாரதி தப்பியோட்டம்

(டில்ஷான்.)  வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பாலை மரங்களும் அதனை ஏற்றி வந்த லொறியையும் இன்று அதிகாலை 03.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட குற்ற ஊழல் தடுப்பு விஷேட புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பெலிஸார் தெரிவித்தனர்.



 கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பொத்தானை காட்டுப்பகுதியில் இருந்து ஓட்டமாவடியில் உள்ள மர ஆலைக்கு கொண்டு வரும் வழியில் பொத்தானை புகையிரதக் கடவைக்கு அருகில் வைத்து பொலிஸாரைக் கண்டதும் மரங்களை ஏற்றி வந்த லொறியை விட்ட விட்டு சாரதி தப்பி ஓடி விட்டதாகவும் அவரை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்;டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 18 தொடக்கம் 20 அடி வரை நீளமான பாலை மரங்கள் இருபது உள்ளதாகவும் இதன் பெருமதியை மதிப்பிடுவதற்கு வன வளத் திணைக்களத்தின் உதவியை நாடியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.