மாபெரும் தாக சாந்தி நிகழ்வு


(சக்தி)
கிழக்கில் சின்னக் கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தின் தாந்தாமலை முருகன் அலய உற்சவத்திற்குச் செல்லும் பக்தர்களின் நலன் கருதி எதிர்வரும் 9 ஆம் திகதி மாபெரும் தாகசாந்தி  நிகழ்வு ஒன்றனை நடாத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக திக்கோடை சிவகலா மன்றத்தின் தலைவர் தங்கத்துரை கரன் கூறினார்.

தாந்தாமலை முருகன் அலய உற்சவத்திற்குச்  கால் நடையாகவும், வாகனங்களின் மூலமும் செல்லும் பக்கதர்களின் நலன் கருத்தி எதிர் வரும் 9 ஆம் திகதி காலை 9 மணிமுதல் மாலை 6 மணி வரை தாந்தாமலை – திக்கோடை பிரதான வீதியில் அமைந்துள்ள அப்பாறைப் பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக தயிர் தாக சாந்தி நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதாகவும், இம்முறை அதிகளவு பத்தர்கள் கால் நடையாகச் செல்வார்கள் என எதிர் பார்க்கப் படுவதனால் தாக சாந்தி நிகழ்வினை பாரிய அளவில் மேற்கொள்ளவுள்ளதாகவும், பக்தர்கள் அனைவரும் அன்றயதினம் இத்தாக சாந்நி நிகழ்வில் கலந்து கொண்டு செல்லுமாறும் திக்கோடை சிவகலா மன்றத்தின் தலைவர் தங்கத்துரை கரன்  வேண்டுகோள் விடுததுள்ளார்.

எதிர் வரும் 10 ஆம் திகதி காலை தாந்தாமலை முருகன் அலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.