ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்ட நிகழ்வின்போது 'எமது சமூகம் ஜதார்த்தமாக சிந்திப்பதன்மூலம் தனித்துவத்தைப்பேண முடியும்'

(வாழைச்சேனை-ரவிக்குமார்) கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப்பிரிவில் இடம்பெற்ற ஒருகிராமத்துக்கு ஒருவேலைத்திட்ட நிகழ்;விற்கு பிரதேச செயலாளர் எஸ்.ஆர் ராகுலநாயகி தலைமைதாங்கினார். இதன்போது பிரதமஅதிதியாக கலந்துகொண்ட முன்நாள் முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகரும், மாகாணசபை உறுப்பினரும் மற்றும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான கௌரவ திரு.சி.சந்திரகாந்தன் அவர்கள் பேசும்போது குறிப்பாக 'எமது சமூகம் ஜதார்த்தமாக சிந்திப்பதன்மூலம் எமது தனித்துவத்தையும், அடையாளத்தையும் நிலையானதாக மாற்றமுடியுமென தெரிவித்தார்.

மேலும் அவர் பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் ஒருகிராமத்துக்கு ஒருவேலைத்திட்டம் என்ற (ஒருகிராமத்துக்கு 10 இலட்சம் ரூபா) அடிப்படையில் பிரதேச செயலக பிரிவிலுள்ள 16 கிராமசேவையாளர் பிரிவுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான ஆரம்ப நிகழ்வு முதன்முதலாக வாகரைப்பிரதேசத்தில் (பொருளாதார அமைச்சின் வேலைத்திட்டம்) இடம்பெறுகின்றது.

எனவே இந்நிகழ்வானது வாகரை பிரதேசத்தின் 16 கிராமங்களிலும் ஒரேநாளில் அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெறுவதையிட்டு அமைச்சின் சார்பாக அவர் முக்கியமாக பிரதேச செயலாளருக்கும் மற்றும் மாவட்ட உதவிதிட்டமிடல் பணிப்பாளா,; வாகரை செயலக உதவிதிட்டமிடல் பணிப்பாளர், துறைசார்ந்த உத்தீயோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு பாராட்டினை தெரிவித்ததோடு தானும் இது தொடர்பாக மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

கௌரவ திரு.சி.சந்திரகாந்தன் அவர்கள் தொடர்ந்து பேசுகையில் கிழக்கில் வாழும் எமது சமூகமானது அரசியல், சமூக, பொருளாதார, கலாசார, மற்றும் கல்வி ரீதியாக மிகவும் பின்தள்ளப்பட்டு, அரசியல் அனாதைகளாக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றோம்.

நாம் ஜதார்த்தமாக சிந்திக்காமை, தனித்துவத்தை பேணிப்பாதுகாக்க முடியாமை போன்ற அடிப்படை காரணங்களால் சந்தர்ப்பத்தை பயன்படுத்தாது கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தை இழந்துவிட்டோம். இந்த தவறை உணர்ந்து கொள்ள எமது அயலில்வாழும் சகோதர சமூகத்துடன் ஒப்பிட்டு ஆழமாக சிந்தித்துப்பாருங்கள் இந்த உண்மை உங்களுக்கே தெளிவாக புரியும்.  

எனவே எதிர்காலத்தில் எங்களை நாங்களே தயார்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்துவதன்மூலம் அரசுடன் இணைந்து எமது மக்களை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்ல முடியும் என்பதோடு பொருளாதாரரீதியாக மற்றவரில் தங்கிவாழும் தன்மையை இல்லாமல்  செய்து தங்கள் கைகளை தாங்களே சுயமாக  நம்பகூடியநிலைக்கு மக்களை சிந்திக்க செய்யவும் முடியும் என்றார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர் அவர்கள் எமது வாகரை பிரதேசத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும்  கௌரவ திரு.சி.சந்திரகாந்தன் அவர்கள் காட்டிவரும் அர்பணிப்பினையும்,அவரது சேவையினையும் பாராட்டி பேசியதோடு பொது மக்கள் இத்தி;ட்டத்துக்கு ஒத்துளைப்பு வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து மாவட்டசெயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அவர்களும்,  பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.வே.நவிதரன் அவர்களும், இத்திட்டம் தொடர்பாக தெளிவான விளக்கமளித்தனர். இதன்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்களும்,பிரதேச சபை உத்தியோகஸ்தர்களும், ஏனைய துறைசர்ந்த உத்தியோகஸ்தர்களும், மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.