கூட்டமைப்பை பிளவுபடுத்தும் சதி; ஒரு போதும் வெற்றியளிக்காது

அர­சாங்கம் ஏனைய கட்­சி­களைப் பிரித்து, துரு­வப்­ப­டுத்தி வெற்றி கண்­டது போன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பையும் பிள­வு
ப­டுத்த நினைக்­கின்­றது. அதற்­காக சில ஊட­கங்­க­ளையும் பயன்­ப­டுத்த முனைகின்­றது.
கூட்­ட­மைப்பை பிள­வு­ப­டுத்த அர­சாங்கம் மேற்கொள்ளும் முயற்சி ஒரு போதும் பலிக்­காது. கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களின் தியா­கத்தால் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட ஓர் கட்­சி­யா கும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் சிரேஷ்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன்  தெரி­வித்தார்.

தமிழத் தேசியக் கூட்­ட­மைப்பு இரண்­டாகப் பிள­வு­பட்­டுள்­ள­தாக சிங்­கள ஊடகமொன்று வெளி­யிட்­டுள்ள செய்தி தொடர்பில்  அவர் இவ்­வாறு தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழுத் தலை­வ­ரான இரா.சம்­பந்தன் மேலும் கூறு­கையில்,
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைப் பொறுத்­த­மட்டில் எந்த விவ­காரம் தொடர்­பிலும் எந்­த­வித பிள­வு­மின்­றியே தனது ஒரு­மித்த செயற்­பாட்டை மேற்­கொண்டு வரு­கின்­றது. கூட்­ட­மைப்பைப் பிள­வு­ப­டுத்த வேண்­டு­மென்­பதில் அர­சாங்கம் கடும் பிர­யத்­த­னங்­களை மேற்­கொண்டு வந்­தது. எனினும் அது சாத்திய­மா­க­வில்லை.
தமி­ழ­ரசுக் கட்­சியின் பேராளர் மாநாடு புரட்­டாசி மாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இந்தப் பேராளர் மாநாட்டில் எமது மாவட்டம் தோறும் உள்ள கிளைகள் மற்றும் பேரா­ளர்கள் ஒன்­று­கூ­டு­வார்கள். இவர்கள் ஒன்­று­கூடி ஏக­ம­ன­தான தீர்­மா­னங்­களை மேற்­கொள்­வார்கள்.
என்னைப் பொறுத்­த­மட்டில் நான் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வ­ராகக் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக இருந்து வரு­கிறேன். அந்த வகையில், எனது பொறுப்­புக்­களை வேறு ஒரு­வ­ரிடம் ஒப்­ப­டைக்­கலாம் என்று கரு­து­கிறேன். அது தொடர்பில் தமிழத் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள், பேரா­ளர்கள் ஒன்று கூடி இணக்­க­மான முடி­வுக்கு வரு­வார்கள். இதன் மூலம் ஒரு போதும் பிள­வு­ப­டவோ, பிரச்­சி­னைகள் எழவோ இட­மில்லை.
கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள் எவரும் பதவி மோகத்தைக் கொண்­ட­வர்கள் அல்ல. அவர்கள் தமி­ழர்­களின் ஈடேற்­றத்­துக்­காக மிகுந்த அர்ப்­ப­ணிப்­புடன் சேவை­யாற்றி வரு­கின்­றனர். அந்த வகையில் கூட்­ட­மைப்பை பிள­வு­ப­டுத்த எடுக்கும் முயற்­சிகள் பய­னற்ற ஒன்­றா­கவே அமையும்.
இதே­வேளை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை பதிவு செய்ய வேண்டும் என்­பது தொடர்பில் கூட்­ட­மைப்பில் அங்­கத்­துவம் வகிக்கும் கட்­சிகள் தங்கள் கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றன. அது தொடர்பில் சாத­க­மாகப் பரீ­சி­லிக்­கப்­படும். எப்­ப­டி­யா­வது கூட்­ட­மைப்பை பிள­வு­ப­டுத்தி தமிழ் மக்­களை அர­சியல் அநா­தை­க­ளாக்­கலாம் என்று அரசு கங்­கணம் கட்டி செயற்­ப­டு­வ­தையே காண முடி­கின்­றது. அதற்கு கட்­சியோ தமிழ் மக்­களோ ஒரு போதும் இட­ம­ளிக்க மாட்­டார்கள் என்­பதே யதார்த்­த­மாகும் என்றார்.
இதே­வேளை, ஜனா­தி­பதி தேர்தல் வேட்­பாளர் தொடர்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­ணியில் பாரிய பிளவு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதித் தேர்­தலில் எதிர்க்­கட்சி வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்­டு­மென சில உறுப்­பி­னர்கள் தெரி­விக்­கின்­றனர் என்றும் மேலும் சிலர், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சார்பில் வேட்­பா­ள­ரொ­ரு­வரை நிறுத்த வேண்­டு­மென தெரி­வித்­துள்­ளதால் இந்தப் பிளவு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் குறித்த சிங்­கள ஊட­க­மொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.
அந்தச் செய்­தியில் மேலும்,
பிர­தான இரு கட்­சி­களின் வேட்­பா­ளர்­க­ளுக்கும் ஆத­ரவு வழங்­கு­வதால் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்கப் போவ­தில்லை. எனவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சார்பில் ஒரு வேட்­பா­ளரை ஜனா­தி­பதித் தேர்தலில் நிறுத்தி தமிழர் மக்களின் பலத்தைக் காட்டுவதுடன் கூட்டமைபைச் சேர்ந்த எம்.பிக்கள் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு நிபந்தனையுடன் ஆதரவு வழங்க வேண்டுமெனக் கருதுகின்றனர். இந்த நிலையின் கீழ் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கடும் கருத்து மோத்ல்கள் ஏற்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.