ஆ.மு.சி.வேலழகனின் நூல் வெளியீடும், நூல் அறிமுக விழாவும்.(போட்டோக்கள்)

(பழுவூரான்)
திருப்பழுகாம மண்ணிற்கு மட்டுமல்லாமல் படுவான்கரைக்கே  இலக்கியத்துறையில்  உலகளாவிய ரீதியில் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் கவிஞர் ஆ.மு.சி.வேலழகன் அவர்களின் "சந்தனக்காடு" என்னும் கவிதை நூல் இன்று(27)  மட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மண்டபத்தில் அதிபர் சு.உதயகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


அத்துடன் அவரின் "வள்ளுவன் சொல்லே வாழும் நெறி", "உள்ளத்தனைய உயர்வு", "தொன்மைமிகு திராவிடார் நாகரீகம்" ஆகிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
பிரதம அதிதியாக போரதீவுப்பற்று  பிரதேசசெயலக பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் அவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்நூல்களை ஆய்வு செய்வதற்காக ரூபி வலன்ரினா(கி.ப.கழக விரிவுரையாளர்), க.தங்கேஸ்வரி(தொல்லியல் ஆய்வாளர்), த.இன்பராசா(கதிரவன் சஞ்சிகை ஆசிரியர்), த.சேரலாதன்(ஆசிரியர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.