மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் கழிவகற்றல் செயற்பாடு ஆரம்பம்

(சக்தி)   

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால்  கழிவுகள் அகற்றும் செயற்பாடு முன் நெடுக்கப்பட்டது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் அப்பிரதேசத்தில் சேகரிக்கப் படும் கழிவுகள் அனைத்தினையும் களுவாஞ்சிகுடி கடற்கரைப் பிரதேசத்தில்தான் இதுவரை காலமும் கொட்டப்பட்டு வந்தன. இதற்கு அப்பகுதி வாழ் பொதுமக்களும், ஏனைய பொது அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இவற்றுக்கிணங்க இன்றிலிருந்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் சேகரிக்கப் படும் கழிவுகள் அனைத்தினையும் களுவாஞ்சிகுடி கடற்கரையில் கொட்டுவத்தில்லை எனவும், இதற்கு மாற்றீடாக தற்போது களுதாவளைப் பிரதேசத்தில் குப்பைகளைக் சேகரிப்பதற்குரிய இடத்தினை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் ஏற்பாடு செய்து தந்துள்ளதாகவும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி யாகேஸ்வரி – வசந்தகுமாரன் கூறினார்.

பொதுமக்களினதும், ஏனைய பொது அமைப்புக்களினதும், வேண்டு கோளிற்கிணங்க இன்று சனிக்கிழமை (26) களுவாஞ்சிகுடி கடற்கரையில் குவிக்கப் பட்டுள்ள அனைத்துக் கழிவுகளையும் அப்பகுதியிலுள்ள குளிகளில்    (பள்ளங்களில்) இட்டு மூடி இதனை துப்பரவு செய்யப்படுகின்றன.
தற்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் சத்திகரிப்புத் தொழிலாளர் ஆளணிபற்றாக் குறை நிலவுவதாகவும், தற்போது 6 சுத்திகரிப்புத் தொழிலாளர்களும், 3 கழிவகற்றும் இயந்திரங்களும் காணப் படுவதாகவும், தெரிவித்த தெரிவித்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் அவர்கள்,

அடுத்த மாதம் “யுனொப்ஸ்” அமைப்பின் ஒத்துழைப்புடன் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் சேகரிக்கப் படும் கழிவுகளைத் தரம் பிரித்து கூட்டடெரு தயாரிக்கும் செயற்பாடு ஆரம்பிக்கவுள்ளதாகவும், இத்திட்டம் தொடர்ச்சியாக 3 வருடங்கள் இடம் பெறும் எனவும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி யாகேஸ்வரி – வசந்தகுமாரன் மேலும் தெரிவித்தார்.