கட்டாக்காலியாகத் திரியும் மாடுகளைப் பிடிக்கும் செயற்பாடு ஆரம்பம்.

(சக்தி) 

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கட்டாக்காலியாகத் திரியும் மாடுகளைப் பிடிக்கும் செயற்பாடு சனிக்கிழமை இரவிலிருந்து (26) ஆரம்பித்துள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி.யாகேஸ்வரி  வசந்தகுமாரன் கூறினார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச எல்லையினுள் இரவு மற்றும் பகல் வேளைகளிலும் கட்டாக்காலியாக மாடுகள் திரிவதாகவும், இவற்றினால வீதி விபத்துக்கள் இடம் பெறுவதாகவும், தொடர்ச்சியாக தனக்கு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளதாகவும் மேற்படி செயலாளர் கூறினார்.


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் எல்லைக்குள் கட்டாக்காலியாகத் திரியும் மாடுகளை இன்று இரவு 7 மணிமுதல் களுவாஞ்சிகுடி பொலிசாரின் ஒத்துழைப்புடன் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் பிடிக்கப்படவுள்ளன.

இவ்வாறு ஒரு மாடு பிடிப்பவருக்கு 500 ரூபாய் வழங்கப் படவுள்ளதோடு, ஒரு மாட்டுக்கு 3000 ரூபாய் அபராதம் மாட்டு உரிமையாளரிடமிருந்து அறவிடப்படும் எனவும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி.யாகேஸ்வரி  வசந்தகுமாரன் மேலும் தெரிவித்தார்.