மண்டூரில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் பழுகாமம் சூட்டிங் ஸ்டார் வி.கழகம் கிரிக்கெட் சம்பியனானது.

(பழுவூரான்)
படுவான்கரையிலே கிரிக்கெட்டிற்கே பெயர்போன கழகமான சூட்டிங் ஸ்டார் வி.கழகமானது மண்டூர் மதிஒளி வி.கழகம் தனது 50வது ஆண்டு நிறைவினையொட்டி நடாத்திய கலாசார விளையாட்டுப் போட்டியிலே கிரிக்கெட், உதைபந்தாட்டம், கலாசார விளையாட்டுக்கள் என்பனவற்றை நேற்று(27) நடாத்தியிருந்தார்கள்.
இதில் கிரிக்கெட் போட்டியிலே பல அணிகள் மோதியதில் இறுதிப்போட்டிக்கு பழுகாமம் சூட்டிங் ஸ்டார் வி.கழகமும், மண்டூர் அருண்மணி வி.கழகமும் மோதியதில் பழுகாமம் சூட்டிங் ஸ்டார் வி.கழகம் தனது வெற்றியினை பதிவு செய்தது.