வரலாற்றுப் புகழ் மிக்க அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய இரதோற்சவம் -வீடியோ & போட்டோ

(சிவம் & வரதன்)
வரலாற்றுப் புகழ் மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் இரதோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றது.

நாட்டின் பல்வேறு இடங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்



சிவன் பார்வதி, பிள்ளையார் மற்றும் வள்ளி தேவனேசா சுப்பிரமணியர் சகிதம் வசந்தமண்டப பூஜை நடைபெற்று மாமாங்கேஸ்வரர் தேரில் ஆரோகணித்தும் அடியாhகள் வடம்பிடித்திழுத்தும் மற்றும் கற்பூரச் சட்டிகள் ஏந்தியும் தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றினர்.

தேரோட்டக் கிரியைகளை ஆலய பிரதம குரு சிவப்பிரம்மஸ்ரீ இரங்க வரதராஜ சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் நிறைவேற்றினர்.

கடந்த 17 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவம் நாளை சனிக்கிழமை (26) பிதுர்க் கடன் தீர்க்கும் ஆடி அமாவாசை தீர்த்தேற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.