சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற 6ம் நாள் கங்காணிபோடிக்குடி விளக்குபூசைத் திருவிழா (வீடியோ)

(நித்தி) சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நான்காம் (6ம்) நாள்; இன்று (30) சனிக்கிழமை கங்காணிபோடிக் குடியனரால் விளக்குபூசைத் திருவிழா மிகவும் சிறப்பானமுறையில் நடைபெற்றன.

நடைபெற்ற கங்காணிபோடிக்குடித் திருவிழாவின்போது காலையில் விநாயகப்பெருமானுக்கு விசேடபூசை, அபிசேகத்துடன் ஆரம்பமாகி அதனைத்தெடர்ந்து முருகப்பெருமானுக்கு அபிசேகமும் பின்னர் தம்ப விசேட அபிசேகப்பூசை நண்பகல் வசந்த மண்டபப்பூசை நடைபெற்றுமுடிந்த பின்பு  சுவாமி உள்வீதி வலம்வந்து பகல் பூசைகள் அனைத்தும் நிறைவடைந்தன. நடைபெற்ற இரவு பூசையில் மகோற்சவ பிரதம குரு கலாநிதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் அவர்களினால் இன்றைய விளக்குபூசை ஆரம்பமாகின. கன்னிப்பெண்களும், திருமணம்முடித்த பெண்களுமென நூற்றுக் மேற்பட்டவர்கள் இப் பூசையில் கலந்துகொண்டிருந்தனர். அதனைத்தொடர்ந்து வசந்தமண்டப பூசை நிறைவடைந்து உள்வீதி வலம்வந்ததும் யாகசாலை பூசை நிறைவடைந்து அலங்கரிக்கபட்ட சப்புரம், குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் ஆலயத்திலிருந்து 6ம் நாளாக வெளிவீதி வந்து மக்களுக்கு காட்சிகொடுத்தார். 

நடைபெற்ற கங்காணிபோடிக் குடியினரின் பகல், இரவு உற்சவகால பூசைகளை திருவிழா ஆலய பிரதம குரு ஈசான சிவாச்சாரிய திலகம் சிவஸ்ரீ.எம்.கே.குகன் குருக்கள் மற்றும் மகோற்சவ பிரதம குரு கலாநிதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றன.