பாவற்கொடிச்சேனை வினாயகர் வித்தியாலயத்தின் 60 வருடகால வரலாற்றின் இடம்பெற்ற முதலாவது பரிசளிப்பு விழா

(சதீஸ்) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள பாவற்கொடிச்சேனை வினாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று 31ம் திகதி பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. 

பாடசாலையின் அதிபர் சு.ரவிசங்கர் அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு கல்விவலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஞா.ஸ்ரீநேசன் க.ஹரிகரராஜ், வவுணதீவு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் த.நிர்மலராஜ் போன்றோரும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் த.சோமசுந்தரம் அவர்களும் மற்றும் கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் கிராம உத்தியோகததர்,வாழ்வின்எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இப் பாடசாலை ஆரம்பித்து 60 ஆண்டுகாலப் பகுதியில் நடந்த முதலாவது பரிசளிப்பு விழா இதுவாகும்.

இதன்போது கடந்த ஆண்டுகளில் கல்வி மற்றும் விளையாட்டுக்களில் படசாலை மட்டம், வலயமட்டம், மாகாணமட்டம் மற்றும் தேசிய மட்டம் போன்றவற்றில் சாதனை படைத்த மாணவர்களுக்கு அதிதிகளால் பாராட்டும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் இதன்போது ஆசிரியர்ளையும் அதிதிகள் மற்றும் கொளரவித்து நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட கல்வி அதிகாரிகள்,  இப் பாடசாலையின் சிறந்த நிருவாககட்டமைப்பிற்காகவும், இந் நிகழ்வை திறம்பட ஏற்பாடுசெய்து நடாத்தியதற்காகவும் அற்பணிப்புடன் சேவையாற்றும் பாடசாலை அதிபரை பாராட்டி பேசியது குறிப்புடத்தக்கது.