கிரான்குளத்தில் விபத்து இருவர் காயம்!

(இனியா)
காத்தான்குடி பொலீஸ்பிரிவிலுள்ள கிரான்குளத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று இரவு 7.00 மணியளவில் கிரான்குளம் பிரதானவீதியில் மோட்டார்சைக்ளிளும் துவிச்சக்கரவண்டியும் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

காயமடைந்தவர்கள் ஆரையம்பதி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாகும் அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.