பட்டிருப்பில் சாரணர் அணியின் துவிச்சக்கர வண்டிச் சவாரி

(CHITHA)

பட்டிருப்பு கல்வி வலயத்தின் உதயபுரம் தமிழ் வித்தியாலய சாரணர்களின் துவிச்சக்கர வண்டிச் சவாரி இன்று ( 20.08.2014) சாரண தலைவரும் பட்டிருப்பு கல்வி வலய உடற்கல்விப் பணிப்பாளர் திரு.என்.நாகராசா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம் பெற்றது. 55 கிலோ மீற்றர் தூரத்தினையுடைய இச் சவாரியில் 7 சாரண மாணவர்கள் கலந்து கொண்டனர்.


பெரியகல்லாற்றில் இருந்து புறப்படும் துவிச்சக்கர வண்டிச் சவாரி பட்டிருப்பு பாலத்தினூடாக கொக்கட்டிச்சோலையினை அடைந்து இரவினை சாரண மாணவர்கள் அங்கு கழித்து அடுத்த நாள் (21.08.2014) மன்முனைப் பாலத்தினூடாக பெரிய கல்லாற்றினை துவிச்சக்கர வண்டிச் சவாரி வந்தடையவுள்ளது.


சாரணர்களின் துணிகரச் செயலை ஊக்குவிக்கும் நோக்குடனும், பட்டிருப்பு வலயம் சார்ந்த ஏனைய சாரணர்களும் வெளிக்களச் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தூண்டும் நோக்குடனும் இச் துவிச்சக்கர வண்டிச் சவாரி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக  சாரண தலைவரும் பட்டிருப்பு கல்வி வலய உடற்கல்விப் பணிப்பாளருமான திரு.என்.நாகராசா தெரிவித்தார்.


சாரணர்களின் துவிச்சக்கர வண்டிச் சவாரி பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தை வந்தடைந்தபோது மாணவர்களை உதவிக் கல்விப் பணிப்பாளர்களான திரு.ரி.நடேசமூர்த்தி, திரு.எஸ்.சந்திரகாசன்,திரு..சுந்தரலிங்கம், கணனி வள நிலைய முகாமையாளர் திரு.எஸ்.திவ்வியராசா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்