மாற்றுத்திரனாளிகளுக்கான தொழில்சார் ஊக்குவிப்பு பயிற்சி


ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் கன்டிகப் இன்ரநெசனல் நிறுவத்தின் நிதியுதவியுடன் கமிட் அமைப்பு அமுல்படுத்தும் மாற்றுத்திரனாளிகளுக்கான வாழ்வாதார திட்டத்தின் ஒரு பகுதியாக தொழில்சார் ஊக்குவிப்பு பயிற்சி வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவில் உள்ள நரிப்புல் தோட்டம், மகிழவட்டவான், விளாவட்டவான், ஆகிய கிராமங்களின் இருந்து தெரிவு செய்யப்பட்ட இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கான  மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் கமிட் அமைப்பின் வாழ்வாதார திட்ட உத்தியோகத்தர் எம். ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் எவ்வாறு ஆரம்பிப்பது அவர்கள் எப்படியான தொழில்களில் முன்னேற்றம் காணமுடியும் அத்துடன் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக தொழில்சார் ஊக்குவிப்பு துறை சம்மந்தமாக தேர்ச்சி பெற்ற வளவாளரான பீ. சிவபாலன் அவர்களினால் பயிற்றுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.